ஆதிக்குடிகளிலிருந்து ஒரு தேசிய இனமாகவும் தொடர்புபட்ட ஒரு நில அமைப்பையும் ஒரு பண்பாட்டு விழுமியத்தையும்
ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட மூத்த மொழியாகிய தமிழ் மொழியையும் அதற்கு ஒப்பான ஒரு சமயத்தையும் உடைய ஈழத் தமிழர்களே வடகிழக்குப் பகுதியில் பெரும்பான்மையானவர்கள்.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னிருந்து தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை கோரி வந்துள்ளது வரலாறு. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நமது நாட்டில் பல அரசியல் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன எந்த அரசியல் அமைப்பிலும் தமிழர்கள் கோருகின்ற தீர்வை முன்வைத்தது இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு 41வருடங்களில் 19 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டன ஆனால் எந்த ஒரு திருத்தத்திலும் தமிழர்களுக்கான நியாமான தீர்வை முன்வைக்கவில்லை. ஆனால் 1989 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13 ஆவது திருத்தத்தில் தமிழர்களுக்கான தீர்வு அண்மித்ததாக அமைந்திருந்தது ஆனால் அன்று அதை தமிழர்கள் ஏற்கவில்லை
இன்றைய நிலையில் 13 தந்தால் போதும் என்று தமிழர்கள் இறங்கி வந்தாலும் அதைக்கூட பெரும்பான்மை இனம் தமிழர்களுக்கு தீர்வாக வழங்க தயாராக இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக கிடைக்கப்பெற்ற 13 ஆவது திருத்தம் தம் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவே அரசும் பெரும்பான்மை இன தலைமைகளும் இன்று வரை கூறிவருகின்றனர்
அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தலைமைகள் அடுத்த வருடத்துக்குள் தீர்வு வரும்இ அடுத்த தீபாவளிக்குள் தீர்வுஇ வரும் இந்த ஆட்சியில் தீர்வு வரும்இ இவர்களுக்கு நாம் ஆதரவு வழங்கினால் தீர்வு வரும்இ என தமிழ் மக்களை தமிழ் தலைமைகள் ஏமாற்றி வருவது கடந்த வரலாற்றில் நாம் கண்டது.
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் தமிழருக்கான ஒரு தீர்வு கிடைக்கும் என நம்ப வைத்திருந்த நிலையில் தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தை தந்திருந்தாலும் தமிழ் தலைமைகளுக்கு அது ஓர் ஏமாற்றமாக இருந்ததில்லை.
இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று எத்தனித்த நிலையில் இரு கருத்து வேறுபாடுகள் கட்சிகளிடையே நிலவின
ஒன்று உள்ளதை திருத்தினால் போதும் புதிது தேவையில்லை என்பது அதாவது 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் இருபதாவது திருத்தம் போதும் என்றும்
இரண்டாவது இருபது தடவை திருத்துவதை விட புதிதாக ஒன்றை கொண்டு வருவோம் என்ற கருத்துக்களே தவிர அதில் தமிழர்களுக்கான தீர்வை வழங்குவதற்கான ஓர் ஏற்பாடாக அமைந்தது இல்லை.
தேர்தல் வழியில் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமா
நமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல், என நான்கு தேர்தல்கள ஊடாக தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றோ அல்லது தமக்கு அதிகாரம் கிடைக்கும் என்றோ நினைத்தால் அது ஓர் பகல் கனவு. ஒட்டுமொத்த தமிழர்களும் ஓர் அணியின் கீழ் நின்றால் கூட நாடாளுமன்ற உறுப்புரிமையுடன் ஒப்பிடுகையில் எட்டில் ஒரு பங்கு இதை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது. ஆனால் மக்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் பறைசாற்றுகின்ற ஒரு மேடையாக பயன்படுத்தலாமே தவிர அதற்கப்பால் தீர்வுக்காக ஒரு அங்குலம் கூட நகர முடியாது. ஒருவேளை ஆட்சி அமைப்பதற்கு முண்டு கொடுத்து சில அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த காலங்களில் தமிழ் தரப்பு சொற்களை வைத்து அரசியல் தீர்வை பெறுவது கடினம் என தெரிவித்திருந்தது. அதாவது சுயாட்சி, சுயநிர்ணய உரிமையை, சமஸ்டி, தன்னாட்சி, இதுபோன்ற சொற்பிரயோகங்கள் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் மாற்றுப் பார்வையை தோற்றுவிப்பதாக கூறி ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்ற புதிய வடிவிலான ஓர் தீர்வை நோக்கி பயணித்தார்கள் (13ஐ தராத தரப்பு தமிழ் மக்களுக்கு தரப்போகிறார்கள் என) நமது தலைமைகள் ஓர் மாயை உருவாக்கியிருந்தனர்.
தமிழர்களுக்கான தீர்வை முன்னெடுத்தது வந்த நிலையில் தமிழிழ கோரிக்கையை முன்வைத்து ஆயுத வழியில் போராடிய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் தற்போது ஜனநாயக வழியில் தீர்வை வென்றெடுக்க போராடுகின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றும் ஒரு நாடு இரு தேசம் என்றும் சுயநிர்ணய உரிமை என்றும் வடகிழக்கு இணைப்பு ஊடான தீர்வு என்றும் கோரினாலும் இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வித்தியாசம் இல்லாத மோதகம் கொழுக்கட்டை போன்றது. இந்த தீர்வானது அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படாமல் கிடைக்கப்போவது இல்லை அவ்வாறு கிடைத்தாலும் அது நிலைக்கப் போவதும் இல்லை.
பேரினவாத தேசியக் கட்சிகள் விட்டுக்கொடுப்புடன் செயற்படாமலும் கிடைக்கப் போவதில்லை ஒருவேளை ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்கி தீர்வை வழங்க முயன்றால் அங்கு அடுத்த பிரச்சினை உருவாகும் அது பௌத்த சாசனத்தின் தலையீடு தற்போது சிங்கள தேசிய அரசியலை தீர்மானிக்கும் ஒரு சக்திகளில் ஒன்று பௌத்த சாசனம்
தமிழ் மக்கள் தமது தீர்வுக்காக ஓர் அழுத்த சக்தியாக இருந்து தீர்வை பெறுவதற்காக மூன்று தசாப்தங்களாக எடுத்த முயற்சியின் பயனாக கிடைக்கப்பெற்றது வெறுமனவே ஓர் அழிவு மட்டுமே. மாற்று வழியில் புத்திஜீவிகள் படித்தவர்கள் புலம்பெயர் தேச உறவுகளை இணைத்து சர்வதேச நாடுகளின் துணையுடன் தீர்வை பெறுவது சாத்தியமற்றது. அதேவேளை பொதுஜன கிளர்ச்சி ஊடாக தீர்வை பெறுவதும் தற்போதைய நாட்டின் நிலைமையில் சாத்தியமற்ற ஒன்றாகவே எண்ண வேண்டியுள்ளது
இவற்றையெல்லாம் தாண்டி தமிழர்கள் அரசியலமைப்பு ஊடக ஓர் நிரந்தர தீர்வை பெறவேண்டுமானால் இங்குதான் ஐந்தாவது தேர்தல் முறை அவசியமாகிறது (1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்திற்கமையஇ சனாதிபதி அவர்கள் மக்கள் தீர்ப்பொன்றை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிட்டதன் பின்னர் தேர்தலின் திகதியையும் குறிப்பிட்டு மக்கள் தீர்ப்பொன்று நடாத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிடுவதனூடாக இடம்பெறும்.)
இதற்கு பெரும்பான்மையின மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அல்லது மக்களின் மனதை வெல்ல வேண்டும். இது தேசியம் பேசுவதன் மூலமோ எதிர்ப்பு அரசியல் நடத்துவதன் மூலமோ செய்துவிடமுடியாது.
இதற்கு தமிழ் சிங்கள உறவுகளிடையே ஓர் இணக்கம் ஏற்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் சிங்கள மக்கள் விரும்புகின்ற அல்லது ஆதரிக்கின்ற விடயங்களை விரும்பியோ விரும்பாமலோ நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ஓர் ராஜந்தந்திர நகர்வாக கூட இருக்கலாம். அடிமட்ட மக்களுக்கு கருத்துக்களைக் கொண்டு செல்லுகின்ற ஊடகவியலாளர்களிடத்தில் சில இணக்கபாட்டை உருவாக்கி தமிழர் தரப்பு நியாயங்களையும் கோரிக்கைகளையும் சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவும் சிங்கள மக்களின் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த கூடிய வகையில் தமிழ் ஊடகவியலாளர்களையும் ஒற்றுமைப்படுத்த ஓர் பொறிமுறை ஒன்று அவசியமாகிறது.
இதேபோல் கலை, கலாச்சார ரீதியில் புரிந்துணர்வை ஏற்படுத்த கூடிய வகையில் சில பொறிமுறைகளை கையாளவேண்டியது அவசியம் நாம் பெரும்பான்மையின மக்களின் நிலைப்பாட்டினை விளங்கி எமது கோரிக்கைகளின் நியாயத் தன்மையை விளக்குவதன் ஊடாகவே அவர்களின் மனது களை வெல்ல முடியும் மூன்று தசாப்த யுத்தம் தமிழர்களுக்கு எவ்வளவு உடல், உள, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியதோ அதேபோல் சிங்கள மக்களுக்கும் கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment