பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம்




அடிப்­ப­டை­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லை­ய­டுத்து முப்­ப­டை­களின் தீவிர சோதனை நட­வ­டிக்­கை­களின் பின்னர்

அரச பாட­சா­லை­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் இன்று திங்­கட்­கி­ழமை முதல் ஆரம்­ப­மா­கியுள்ளது. 

இதற்­க­மை­வாக தரம் - 6 லிருந்து 13 ஆம் தர மாண­வர்­க­ளுக்­கான கற்றல் நட­வ­டிக்­கை­களை இன்று ஆரம்­பிக்­கவும், தரம் - 1 தொடக்கம் தரம் - 5 மாண­வர்­க­ளுக்­கான கல்வி நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் 13 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 
உயிர்த்த ஞாயி­றன்று தேவா­ல­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர்  நாட்டில் பலத்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பாட­சா­லை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் நாட­ளா­விய ரீதியில் கடந்த ஒரு­வார கால­மாக அனைத்து பாட­சா­லை­க­ளி­னதும் பாது­காப்பு குறித்து கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது. 
அதன்­படி பாது­காப்பு கருதி பிற்­போ­டப்­பட்ட இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் மீண்டும் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 
விஷேட சோதனை நட­வ­டிக்­கைகள்
இன்­றைய தினம் கல்வி நட­வ­டிக்கைள் ஆரம்­ப­மா­கியுள்ள நிலையில் மாண­வர்­களின் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­காக இம்­மாதம் முதலாம் திகதி முதல் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள சகல அரச மற்றும் தனியார் பாட­சா­லை­க­ளிலும் முப்­ப­டை­யி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சோதனை நட­வ­டிக்கைள் நேற்­றைய தினம் நிறை­வ­டைந்­தன. 
அத்­தோடு கொழும்­பி­லுள்ள பாட­சா­லை­களின் பாது­காப்பு குறித்து அதிக கவனம் செலுத்­தப்­பட்டு நேற்று பிற்­பகல் 1 மணிக்குப் பின்னர் விஷேட சோதனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  பாட­சாலை ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் மாத்­தி­ர­மின்றி தொடர்ந்தும் இந்த சோதனை நட­வ­டிக்­கைகள் பிர­தேச பொஸில் பிரி­வு­க­ளி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 
பாட­சாலை பாது­காப்பு 
பாட­சா­லையின் பாது­காப்பு குறித்து பெற்­றோர்கள் மற்றும் பிர­தேச பொலிசார் இணைந்து நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் பாட­சாலை பிர­தான நுழை­வாயில் சோதனை நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளல் மற்றும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான நட­மாட்­டங்­களை கண்­கா­ணித்தல் உள்­ளிட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­துடன் பொலி­சா­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  இதற்­காக  சம்­பந்­தப்­பட்­டோ­ருக்கு  அறு­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 
கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் 
பாட­சா­லை­க­ளுக்­கான பாது­காப்பு குறித்து கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­விக்­கையில், 
பாது­காப்பு சபை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் அமைச்­ச­ரவை என அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே பாட­சா­லை­களை ஆரம்­பிக்க தீர்­மா­னித்­துள்ளோம். முப்­ப­டை­யினர் மாத்­தி­ர­மின்றி பாட­சா­லை­க­ளி­லுள்ள மாண­வர்­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்றை அமைத்து அதன் மூல­மா­கவும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 
விஷே­ட­மாக பாது­காப்பு சபை வழங்­கிய ஆலோ­ச­னைக்கு அமை­யவே இந்த தீர்­மானம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அவ்­வா­றில்­லை­யென்றால் பாட­சா­லை­களை ஆரம்­பிப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­தி­ய­ளித்­தி­ருக்­கப்­பட மாட்­டாது. காரணம் மாண­வர்கள் பாது­காப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் எமக்கு பாரிய பொறுப்பு உள்­ளது.  
குண்டு தாக்­கு­தல்­க­ளுக்கு பின்னர் நாடு வழ­மைக்கு திரும்­பி­யுள்­ளது. தொடர்ந்தும் கல்வி நட­வ­டிக்­கை­களை பிற்­போட முடி­யாது. எனினும் சில தரப்­பி­னரால் மக்­க­ளுக்கு பயத்தை உண்­டாக்கும் வகையில் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றை கவ­னத்தில் கொள்­ளாது அர­சாங்­கத்தின் மீதும், பாது­காப்பு படை மீதும் நம்­பிக்கை வைத்து பெற்றோர் தமது பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரு­வ­தாகத் தெரி­வித்தார். 
பொலிஸ் பேச்­சாளர் ருவண் குண­சே­கர
பாட­சா­லை­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விஷேட பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவண் குண­சே­கர தெரி­விக்­கையில், 
சகல பாட­சா­லை­க­ளிலும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கொழும்­பி­லுள்ள பாட­சா­லைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­தோடு பொலிஸ் தலை­மை­யத்தின் மூலம் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள சகல பொலிஸ் பிரி­வு­க­ளுக்கும் இது குறித்து தொடர் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 
சாதா­ர­ண­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தவிர விஷே­ட­மாக ஒவ்­வொரு பொலிஸ் பிரிவின் மூலமும் இதற்­கான பிரத்­தி­யேக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­கான நிய­மிக்­கப்­பட்ட விடேஷ குழுக்­களின் மூலம் இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். 
பாட­சாலை சேவை வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்­கான விஷேட தரிப்­பி­டங்கள்
பாட­சா­லைகள் ஆரம்­ப­மா­ன­வுடன் அருகில் தேவை­யற்ற வாக­னங்கள் நிறுத்­து­வ­தற்கு முற்­றாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் பாட­சாலை சேவைக்­கு­ரிய பஸ் மற்றும் வேன்கள் என்­ப­வற்றை நிறுத்­து­வ­தற்­கான விஷேட தரிப்­பி­டங்கள் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் வாக­னங்­களை நிறுத்­து­வ­தற்கு குறித்த பிர­தே­சத்தின் பொலிஸ் பிரிவில் அனு­மதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவண் குண­சே­கர தெரி­வித்தார். 
அதற்­க­மைய கொழும்­பி­லுள்ள பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட பாட­சா­லை­களின் வாக­ன­ஙக்­களை எந்­தெந்த இடங்­களில் நிறுத்த வேண்டும் என்ற அட்­ட­வ­ணையை பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்­ளது. 
மரு­தானை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லைகள்
மரு­தானை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லை­க­ளுக்­காக வாக­னங்கள் வைஸ்­பி­டிய ஆனந்த மாவத்த மற்றும் டீ.ஆர் விஜே­வர்­தன மாவத்த கொழும்பு 10 ஆகிய இடங்­க­ளிலும் வாக­னங்­களை நிறுத்­தலாம். 
வெல்­ல­வீ­திய பொலிஸ் பிரிவு  
வெல்­ல­வீ­திய பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லை­க­ளுக்­கான வாக­னங்கள் சங்­க­ராஜ மாவத்த , குமார தொரட்­டுவ மெல்­வத்த மைதா­னத்­திலும் வாக­னங்­களை நிறுத்­தலாம். 
மேலும் மாளி­கா­வத்தை பொலிஸ் பிரிவில் மாளி­கா­வத்தை, சத்­தர்ம மாவத்தை சதோச வாகன தரிப்­பி­டத்­திலும், கொம்­பனி வீதி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லை­க­ளுக்­கான வாக­னங்கள்  கொம்­பனி வீதி பொலிஸ் பிரிவில் கொழும்பு 2 யூனியன் பிலே­ஸிலும், வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லைகள் வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரிவில் கொழும்பு 12, சோன்டஸ் மைதா­னத்­திலும் நிறுத்­தப்­பட வேண்டும் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. 
இதே போன்று மோதரை பொலிஸ் பிரிவில் கொழும்பு 15, மட்­டக்­குளி விஸ்வைட் மைதா­னத்­திலும்,  தெமட்­ட­கொட பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலை­யத்­திற்கு முன்­னா­லுள்ள பகு­தி­யிலும் பாட­சாலை வாக­னங்­களை நிறுத்­த­வேண்டும். 
கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரிவில் சங்­க­ராஜ மாவத்தை மெல்­வத்த மைதா­னத்­திலும், சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கிற்கு பின்­னா­லுள்ள பகு­தி­யிலும் வாக­னங்­களை நிறுத்­தலாம். 
கிரு­லப்­பன பொலிஸ் பிரிவில் கிரு­லப்­பனை, ஹைலெவல் வீதி லலித் எதுலன் முதலி மைதா­னத்­திலும் பாட­சாலை வாக­னங்கள் நிறுத்­தப்­பட வேண்டும். 
மேலும் நார­ஹேன்­பிட்ட பொலிஸ் பிரிவில் நார­ஹேன்­பிட்ட, பாக் வீதி ஷாலிகா மைதா­னத்­திலும், பொரளை  பொலிஸ் பிரிவில் பொரளை, பேஸ்லைன் வீதி கெம்பல் மைதா­னத்­திலும் வாக­னங்­களை நிறுத்­த­வேண்டும். 
குருந்­து­வத்த பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பாட­சா­லைகள் 
குருந்­து­வத்த பொலிஸ் பிரிவில் கொழும்பு 7 , எப்.ஆர் சேனா­நா­யக்க மாவத்த, ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்த, தர்­ம­பால மாவத்த ஆகிய இடங்­க­ளிலும், கொழும்பு 7 அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­திற்கு அரு­கிலும், நந்­த­தாச கொட்­டா­கொட வீதி, மார்கஸ் பிர­னாந்து வீதி ஆகிய இடங்­க­ளிலும், கொழும்பு 3 , பெர­ஹரா வீதி ஸ்டேன்லி ஜேன்ஸ் மைதா­னத்­திலும், கொழும்பு 7 ரோயல் கொம்லெக்ஸ் அர­சாங்க தகவல் திணைக்­கள வீதிக்­க­ரு­கிலும், கொழும்பு 7 கிரே­கரி வீதி­யிலும் , மல­ல­சே­கர வீதி  மைதா­னத்­திற்கு முன்­னா­லுள்ள பகு­தி­யிலும் , கின்ஸி மாவத்தையிலும் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
கொள்ளுபிட்டி  பொலிஸ் பிரிவில் கொள்ளுபிட்டி  புகையிரத திணைக்களத்திலிருந்து பம்பலபிட்டி  புகையிரத நிலையம் வரையும், ஸ்டேன்லி ஜேன்ஸ் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம். 
பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
பம்பலபிட்டி  பொலிஸ் பிரிவில் பம்பலபிட்டி புகையிரத திணைக்களத்திலிருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையும், கொழும்பு 4, ஹைலெவல் வீதியில் உள்ள மைதானத்திலும் , கொழும்பு 6 , லோரன்ஸ் வீதி குரே மைதானத்திலும், கொழும்பு 4, ஹைலெவல் வீதி ஹென்ரி மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தலாம். 
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள்
வெள்ளவத்த பொலிஸ் பிரிவில் வெள்ளவத்தை புகையிரத நிலையம் தொடக்கம் இராமகிருஷ்ன சந்தி வரையும் வாகனங்களை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
thank you:virakesari

About the Author

Yaso vinayak

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com