இன்றைய தினம் வீணான அச்சம் தேவையில்லை
இன்றைய தினம் அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வரும் தகல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ, புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும் இது தொடர்பில் பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன்,
பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதே போன்று நேற்றைய தினம் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் எவ்வித தடங்களும் இன்றி இடம்பெற்றதாக தெரிவித்த அவர்,பொது மக்கள் எவ்வித அச்சமுமின்ற அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்:-இன்றையதினம் (13 ஆம் திகதி) தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் பலரும் அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினராலோ புலனாய்வு தரப்பினராலே உறுதிப்படுத்தப்படாதவைகள். பொலிஸாருக்கு கிடைக்கப் பெறும் எந்தவொரு தகவல்களையும் நாம் தட்டிக்களிப்பதில்லை மாறாக அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பாதுகாப்பு தரப்பினர்களுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதே போன்று பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எவ்வித குறைப்பாடுகள் இன்றி இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விஷேடமாக ஞாயிறு சமய வழிபாடுகள் எவ்வித தடையின்றி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மேலதிக வகுப்புகளுக்கு வரும் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. எனவே,பாதுகாப்பு தரப்பினரால் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
Thankyou :thinakaran
0 comments:
Post a Comment