2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டதின் முழுமையான விபரம்

நடைபெற்று முடிந்த 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் முழுமையான விபரம்05:06 PM – 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பு நிறைவுபெற்றது
05:06 PM – வரவு – செலவுத்  திட்டத்தை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.
05:05 PM – பழைய வாகனங்களின் ஏற்றுமதிக்கு வரி நிவாரணம்
05:04 PM – இலங்கையிலுள்ள 100 மிகப்பெரிய தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் கோரிக்​கை விடுக்கின்றேன்.
05:04 PM – தன்னியக்க டெலர் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
05:04 PM – இணையத்தள பரிமாற்றங்களுக்கு வரி அறவிடப்படும்.
05:03 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு வரிச்சலுகை.
05:02 PM – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.
05:02 PM – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
05:01 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்
05:01 PM – கார்பனுக்கு புதிய வரி.
05:00 PM – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
05:00 PM – பெல்மடுல்லவில், அனர்த்த முகாமைத்துவ மையமொன்று அமைக்கப்படும்
05:00 PM – 425 கிராம்  நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.
04:59 PM – உள்நாட்டு பால்மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.
04:58 PM – மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை  5 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை  5 ரூபாயால் குறைப்பு.
04:57 PM – உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – பருப்பு ஒரு கிலோகிராமின் விலை  10 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – பயறு ஒரு கிலோகிராமின் விலை  15 ரூபாயால் குறைப்பு.
04:56 PM – வருமான வரி மீள்பரிசீலனை செய்யப்படும்
04:54 PM – நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரையான நேரத்தில் 50 ரூபாயாக குறைக்கப்படுகின்றது
04:54 PM – லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10,000 ரூபாய்
04:53 PM – சூரிய சக்தி திட்டங்களுக்கான கடனுக்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:53 PM – சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:52 PM – மாத்தறை கடற்பிராந்திய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:51 PM – பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன
04:50 PM – ரியல் ஸ்டேட் மேலாண்மை தகவல் அமைப்பு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குள் உள்ளடக்கப்படும்
04:49 PM – சிறிய குளங்களுக்காக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:49 PM – நஞ்சற்ற நாடு திட்டத்துக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:48 PM – நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 1,750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:47 PM – கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:45 PM – அரச சேவையாளர்கள் 14 இலட்சம் பேர் இருந்தாலும், பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோருக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
04:44 PM – பொதுச்சேவைகள் குறித்தான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும்
04:43 PM – பொதுச் செயலாளர் பொதுப்பணித் துறையை ஆய்வு செய்தல்
04:42 PM – இளைஞர்களது திறமைகளை வளர்க்க, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:41 PM – புதிதாக துறவியாகுபவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படும்.  இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:41 PM – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.
04:40 PM – ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.
04:39 PM – சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:38 PM – ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி
04:38 PM – சுகததாச விளையாட்டரங்கு புதுப்பிக்கப்படும். இதற்கு, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:37 PM – இளைஞர்  ​தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:37 PM – பண்டித் அமரதேவ கலாசார நிலையத்துக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:36 PM – போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:36 PM – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.
04:34 PM – தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:34 PM – நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:34 PM – சர்வதேச வெசாக் உற்சவத்துக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:33 PM – புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவ​டிக்கைக்கு ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாய் நிதியொதுக்க புகையிலைநிறுவனத்துக்கு யோசனை.
04:33 PM – பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காக, 1.5 மில்லியன் ரூபாயை, வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காக, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:32 PM – ரயில்வே துறையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
04:31 PM – ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
04:30 PM – வாழ்க்கைப்பூராகவும் நீடிப்பதற்கான அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம்
04:30 PM – ஓய்வூதியக் கொடுப்பனவுத் திட்டமானது, ​​வெடிக்கும் நிலையிலிருக்கும் குண்டாகும். ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபாய்.
04:28 PM – இராணுவத்தினருக்கான கொடுப்பனவை வழங்க 3500 மில்லியன் ரூபாய்.
04:28 PM – அரசாங்க வீட்டுத்திட்டங்களில்  10 வருடங்களுக்கு மேல் வாழ்தோர் அவர்களது வீட்டின் உரிமத்தை மாற்றுவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:28 PM – படையினரின் கொடுப்பனவுக்கு 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:28 PM – சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். அத்துடன், சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும்.
04:26 PM – மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்
04:26 PM – தோட்டத்தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள்
04:25 PM – வடக்கு கிழக்கின் வீடமைப்புக்களை வேகமான முன்னெடுப்பதற்கு 5000மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:25 PM – 15 வருடங்களுக்கும் மேலாக அரச வீடுகளில் வசித்துவருவோருக்கான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது, ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க, 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
04:23 PM – தேசிய சேமிப்பு வங்கி மற்றும் வீடமைப்புத்துறை வங்கி ஆகியன ஒன்றிணைந்து 7 சதவீதக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
04:23 PM – நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக முகவர் நிறுவனமொன்று அமைக்கப்படும். அதற்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
04:19 PM – பெருந்தோட்டத்துறை தோட்டத் தொழிலாளர்களுக்கான 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்கான காணிகள், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.
04:19 PM – மார்ச் 31ஆம் திகதியிலிருந்து புதிய உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
04:18 PM – நிதி பரிமாற்ற நிறுவனங்கள் 200 ஆரம்பிக்க அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படும்.
04:18 PM – பிரமிட் திட்டங்கள் மற்றும் கடன் வசூலிப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு எதிரான சட்டங்கள், நிதி நிறுவனங்கள் வரை நீடிக்கப்படும்
04:17 PM – நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனமொன்று உருவாக்கப்படும்.
04:17 PM – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும்
04:17 PM – மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்.
04:16 PM – திருகோணமலை நீர்த்திட்டத்தை அபிவிரு‌த்தி செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:16 PM – 2018ஆம் ஆண்டளவில், புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சேவைகள் சுய நிதியுதவியில் இயங்கும்
04:14 PM – நாடளாவிய ரீதியான குடிநீர்த்திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:14 PM – இலத்திரனியல் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:14 PM – முச்சக்கரவண்டி மற்றும் வான்களை கட்டுபடுத்த நிறுவனம்.
04:13 PM – புகையிரதம் மற்றும் பஸ்களில் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான திட்டம்
04:13 PM – 32 ஆசனங்களைக் கொண்ட பாடசாலை வான்களுக்காக 75 சதவீத வட்டி விலக்களிப்புக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:13 PM – 10 வருடங்களுக்கும் பழமையான ஹோட்டல்களுக்கு மீள் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:11 PM – கூட்டங்கள், மாநாடுகள், ஊக்குவிப்புகள், கண்காட்சி கைத்தொழிலுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:11 PM – பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிலாக 35 இருக்கைகளைக் கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும்.
04:09 PM – முச்சக்கரவண்டிகளுக்கு பதிலான இலத்திரனியல் கார்கள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக 1000 வாகனங்களை இறக்குமதிச் செய்ய 50 சதவீதம் வட்டி குறைப்பு.
04:08 PM – பதுளைக்கு நெடுஞ்சாலைகளை அமைப்பது சாத்தியமான என்பது குறித்து ஆராயப்படும்
04:08 PM – மத்திய மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
04:07 PM – உல்லாசப ்பயணிகளுக்கான இலத்திரனியல் விசா முறை அறிமுகப்படுத்தப்படும்.
04:07 PM – சுற்றுலா வீடுதிகளில் குறைந்த அறைக் கட்டணம் இனங்கண்டு அறிவிக்கப்படும்.
04:06 PM – நெனோ தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள கல்வி நிறுவகங்களில் அறிமுகப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:05 PM – சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இதற்கு சுற்றுலா முக்கோண வலயம் அமைக்கப்படும்.
04:05 PM – தெற்கு அதிவே நெடுஞ்சாலை பதுளை வரை விருத்திச் செய்யப்படும்.
04:05 PM – நிர்மாணத் துறைக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வை நீக்கப்படும்.
04:05 PM – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக 1,306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
04:04 PM – இணையத்தள பயணத்துறையில் பொதுவான தொழில்நுட்பம் கொண்டுவரப்படும்
04:03 PM – பதுளையில் உள்நாட்டுக்கான விமானிநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் உண்டு
04:03 PM – மொபிடல் நிறுவனத்தை பொதுக் கம்பனியாக பட்டியற்படுத்தல்
04:02 PM – ஸ்ரீ லங்கன் எயார்லைன் மற்றும் மிஹின் எயார் வர்த்தகரீதியாக்கப்படும்
04:01 PM – நனோ தொழிநுட்ப நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:01 PM – துறைமுகத்தில் 12 மணித்தியாலங்கள் நங்கூரமிடுவதற்கு இலவசம்.
04:00 PM – நாட்டில் வளர்ச்சி குன்றிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்ளுக்கு வரி விடுமுறை அறிக்கப்படும்
03:58 PM – கடல் மையங்கள் குறித்து முக்கிய நோக்கம் செலுத்தப்படுகின்றன. கடல் சார் அதிகாரங்கள் நிறுவப்படும்
03:58 PM – இலங்கையை, ஆசியாவின் ​கேந்திர மத்திய நிலையமாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
03:57 PM – அரச வியாபாரங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:56 PM – இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கிக்கான தேவை ஏற்பட்டுள்ளது
03:54 PM – வர்த்தகத்துறைக்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:53 PM – கொழும்பு வர்த்தகக் கண்காட்சியை அடுத்த வருடம் நடத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:53 PM – ஏற்றுமதி கைத்தொழில் பேட்டைகள் 15 ஆரம்பிக்கப்படும்.
03:52 PM – இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:51 PM – இலங்கையின் உற்பத்திகளுக்கும் தேவைகளுக்கும் பன்முகத்தன்மை தேவை
03:50 PM – பெருநகரங்களுக்காக நிதியமைச்சினால் 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு
03:49 PM – ஆடைத் தொழிற்துறைக்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை.
03:49 PM – 100 மில்லியன் மற்றும் 500 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும்
03:48 PM – தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி விடுவிப்பு.
03:47 PM – சரியான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா
03:47 PM – ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய பகுதிகளில், அமெரிக்க டொலர் 3 மில்லியனுக்கும் மேலதிக வர்ததகத்தை மேற்கொள்வதற்கு, 100 சதவீத முதலீட்டுக் கொடுப்பனவுகள்.
03:47 PM – 500 மில்லியன் ரூபாய்க்கு அதிக முதலீடு தொடர்பில் ஊக்குவிப்புத் திட்டம்.
03:45 PM – வடக்கில் வர்த்தகங்களை முன்னெடுப்பதற்கு 200 சதவீதமான முதலீட்டு கொடுப்பனவுகள்
03:44 PM – செல்வத்தை உருவாக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.
03:43 PM – உப்பு உற்பத்தி நிறுவனங்கள் துன்பநிலையில் உள்ளன.ஆகையால், அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை.
03:43 PM – சுகாதார அமைப்புக்களை பலப்படுத்தும் வகையில், அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளும் நோயாளிகளுக்கு செலவுத்தாள் ஒன்றை வழங்குதல் வேண்டும்
03:43 PM – பெறுமதி சேர்க்கப்பட்ட வியாபாரங்கள் ஊக்குவிக்கப்படும்.
03:41 PM – செலவாணி கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு மாற்றீடு கொண்டுவரப்படும்
03:39 PM – ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மத்திய ஓய்வூதிய நிதி சீரமைக்கப்படும்
03:38 PM – சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:38 PM – மனித வளத்தை வழங்கும் நிறுவனங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
03:37 PM – சிறு வியாபாரிகளுக்கு சலுகைக் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.
03:37 PM – கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல்  வேண்டும். இதற்காக 11 மணிவரைக்கும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
03:34 PM – ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட செலவு தொடர்பிலான பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
03:34 PM – 500,000 ரூபாய் பெற்று அதனால் கடன் தகவல் பணிகயத்தில் பெயர் பதியப்பட்டதால், அவதிப்படுவோர்க்கு, அவர்களது வர்த்தகத்தை தொடர்ந்து செய்துக்கொண்டுச் செல்வற்கு அனுமதி
03:33 PM – அனைத்து ஒளடத நிலையங்களும், ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
03:32 PM – வணிகங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:31 PM – வியாபார நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:31 PM – பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத காணிகளை, வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
03:30 PM – வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.
03:30 PM – பதிவு செய்யப்படாத மருந்து கடைகளை  நடத்திச் செல்வோரை கைதுசெய்து 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தல்
03:30 PM – கராப்பிட்டி, யாழ்ப்பாணம், அம்பாறை ஆதார வைத்தியசாலையில் குழந்தை மையங்களை அமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:28 PM – அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்
03:28 PM – தாதியர் பயிற்சிப் பாடசாலைகளுக்காக, 200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.
03:28 PM – தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:26 PM – தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:26 PM – வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:26 PM – பாலர் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தவணை முறையிலும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
03:25 PM – பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்படும்
03:22 PM – களனி பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
03:22 PM – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்துக்கு, வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு இணையும் மாணவர்கள் 15 ஆயிரம் பேருக்கு, 8 இலட்சம் ‌ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
03:21 PM – நல்ல பெறுபேறுகளை பெறும் மாணவர்ளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்
03:21 PM – வௌிநாட்டு மாணவர்கள் 500 பேர், இலங்கையில் கல்வி கற்பதற்கு 500 விசாக்கள் வழங்கப்படும்.
03:21 PM – கல்விச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மாணவர்ளுக்கான  ஒன்றுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்படும
03:19 PM – பட்டப்படிப்புக்களை மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
03:18 PM – எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குபின்னர், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் இரவு 8 மணிவரை நீடிக்கப்படும்
03:17 PM – பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:16 PM – இளைஞர் – யுவதிகளுக்கான உயர்க் கல்வியை வழங்கும் நடவடிக்கையை, அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அதற்கு, தனியார்த் துறையினரும் முன்வர வேண்டும்.
03:16 PM – கராப்பிட்டிய வைத்தியசாலையில் 10 மாடிக்கட்டடம் அமைக்கப்படும்.
03:15 PM – பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக, 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
03:15 PM – யாழ்ப்பாணம், ஜயவர்த்தனபுர, களனி, பேராதெனிய, ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடங்கள் தொடர்புடைய கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும்
03:14 PM – பல்கலைக்கழக மாணவர்களை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
03:13 PM – சுகாதார காப்புறுதிக்காக 2,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:13 PM – ஜயவர்தனபுர, களனி, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்களில், கல்விசார் பட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை
03:12 PM – புள்ளிவிவரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக, 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:12 PM – பாடசாலையில் நல்ல ​பெறுபேறுகளை வெ ளிப்படுத்தும்  மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில் திட்டங்கள். இவர்களுக்கு மாதந்ததம் 2,000 ரூபாய் வழங்கப்படும்
03:11 PM – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான மாணவர் இணைப்பு, 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்தினால் அதிகரிக்கப்படும்.
03:11 PM – சுகாதார வசதிகளுக்காக  5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:11 PM – 2020இல், பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கப்படும்.
03:10 PM – கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்த போதிலும், முதலீடுகள் தேவையான பிரிவுகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
03:10 PM – தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும்
03:10 PM – 5 வயது முதல் 19 வயது வரையான 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் காப்புறுதி வழங்க நடவடிக்கை
03:09 PM – சிறுவர்களுக்கான 200,000 காப்புறுதிகளும் சேமிப்புக்கணக்கும்
03:09 PM – கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:08 PM – விசேட கல்வியை பெறும்  மாணவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிப்பு
03:07 PM – விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக 175 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:07 PM – 2017ஆம் ஆண்டில் 100 பாடசாலைகளில் நீர் , மின்சார வசதிகளுக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:06 PM – கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதரம் ஆகியவற்றுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்
03:06 PM – பாடசாலைகளுக்கான அ​டிப்படை தேவைகளை வழங்கும் பொருட்டு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:05 PM – கல்வித்துறையை மேம்படுத்துவற்காக, 17840 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:04 PM – உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்
03:02 PM – பாடசாலை மாணவர்களுக்கு இலவச டெப்கள் வழங்கப்படும். Wifi அமைத்துக்கொடுக்கப்படும் . இதற்கு 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:01 PM – கல்விக்கு 90,000  மில்லியன் ‌ரூபாய் நிதி ஒதுக்கீடு
02:59 PM – கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.
02:58 PM – 50 வேலாண்மை ஆய்வு நிலையங்களை  அமைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்
02:57 PM – 20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
02:56 PM – மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:53 PM – மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:53 PM – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.
02:52 PM – 100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்
02:52 PM – கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் ​சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.
02:51 PM – ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:51 PM – கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு.
02:50 PM – ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு
02:50 PM – கரையோர மீன்பிடி வலய அபிவிருத்திக்கு 1200 மில்லியன்  ரூபாய் ஒதுக்கீடு.
02:49 PM – இறப்பர் உற்பத்திக்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:48 PM – தேசிய ரீதியில் பாற்பண்ணை வலங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
02:48 PM – பல்கலைக்கழக கல்விமுறைமை விரிவுபடுத்தப்படும்
02:46 PM – திரவப் பாலுக்கான உயர் ரக கரவைப் பசுக்கள் 15 ஆயிரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
02:46 PM – இறப்பர் ஆராய்ச்சிக்கு நிறுவகத்துக்கு 50 மில்லியன் ‌‌ரூபாய் ஒதுக்கீடு.
02:46 PM – எத்தனால் இறக்குமதிக்கு 5சதவீத வரி அறவிடப்படும். உள்ளூர் சீனி உற்பத்திகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
02:45 PM – சீனி இறக்குமதிக்கான இறக்குமதித் தீர்வை, 2 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை
02:45 PM – கரும்பு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் காணிகள் வழங்கப்படும்
02:44 PM – தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, 75 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு
02:43 PM – விவசாய கூட்டுறவுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும்
02:43 PM – இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, 900 மில்லியன் ‌ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com