பேரை தெரிவு செய்வதற்கு 04/10/2016 முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரிவுசெய்து எனும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெறுகிறது.
Diversity Visa Program எனும் இக்குலுக்கல் திட்டத்துக்கு விண்ணபிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் அமெரிக்க வதிவிட உரிமை பெறுவதற்கான DV-2018 குலுக்கல் திட்டத்துக்கு அமெரிக்க நேரப்படி இன்று ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆம் திகதி நன்பகல் முதல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்.
www.dvlottery.state.gov எனும் இணையத்தளத்தின் மூலம் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இவ்விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது
0 comments:
Post a Comment