ஆனந்தனும் சத்தியலிங்கமும் இணைவு! முடிவிற்கு வந்தது உண்ணாவிரத நாடகம்!!

ஓமந்தையில் பொருளாதார வர்த்தக மத்திய நிலையம் அமைக்க கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை
ஆரம்பித்தார் 72வயதுடைய மகேஸ்வரன் என்பவர் நேற்றைய தினம் மூன்றாவது நாளாக தொடர்ந்த மகேஸ்வரனின்(மலேபாம்பு) போராட்டமானது அனைவரும் எதிர்பார்த்தால் போல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வருகையுடன் நிறைவுக்கு வந்தது

இதில் வேடிக்கை என்னவென்றால் ஓமந்தையில் மத்திய நிலையம் அமைக்கப்படவேண்டும் இதை ஜனாதிபதி பிரதமர் வடமாகாண முதலமைச்சர் அல்லது எதிர்கட்சி தலைவர் தனக்கு உறுதிவளங்கவேண்டும் அத்துடன் எழுத்து மூலம் தரவேண்டும் இல்லையேல் தனது உடல் தான் இவ்விடத்தை விட்டு செல்லும் எனகூறியே தனது போராட்டத்தை ஆரம்பித்தார் மகேஸ்வரன் ஆனால் இறுதியில் நடந்தது என்ன சிவசக்தி ஆனந்தன்(பா.உ) மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் திரு.ப.சத்தியலிங்கம் இருவரும் கை குழுக்கியதும் முடிவுக்கு வந்தது

போராட்டம் , அவ்வாறானால் இரண்டு உறவுகார அரசியல் வாதிகளை ஒன்று சேர்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினரின் கை ஓங்கியிருப்பதை காட்டுவதற்காக ஏற்றப்பட்ட நாடகமாக? இது அதிலிருந்த புத்திஜீவிகளுக்கும் இந்நாடகத்தை மேடையேற்றியவர்களுக்கும் அப்பட்டமாக தென்பட்ட உண்மை சம்பவம்

இன்னும் பல சுவாரஷ்யமான சம்பவங்களும் இங்கு இடம்பெற்றது சத்தியலிங்கம் அவர்கள் இவ்விடத்திற்கு வருவதற்கு முன் இந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் பலர் சத்தியலிங்கம் அவர்களை அவ்விடத்தில் வைத்து கொச்சை வார்த்தைகளால் திட்டித்தீர்தமை அத்துடன் “இங்கு காலடி எடுத்து வைத்தால் அடி தான் வாங்குவார்” என பல்வேறு வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர் சத்தியலிங்கம் ஐயாவை

ஆனால் நடந்தது என்ன இறுதியில் மகேஸவரனும் சரி கூட இருந்த நடிகர்களும் சரி ஒன்றாக முடிவெடுத்தனர்

எமக்கு மத்தியநிலையம் வேண்டாம் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் போதும் என்று இறுதி முடிவை எடுத்து உண்ணாவிரதத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர் அத்துடன் நாடகமென்று அறியாத மக்களுக்கும் ஊடகங்களுக்காகவும் வெறும் கண்துடைப்பிற்காக அல்லது ஏற்கனவே திட்டமிட்டது போல இருவரும் சேர்ந்து ஓர் மடலை உறுதுமொழியாக மகேஸ்வரனிடம் கொடுத்தார்கள் அதில் தாம் இணைந்து பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைத்து தருவதாக எழுதப்பட்டிருந்தது.

மக்களே சிந்தியுங்கள் 21 மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து ஓமந்தைக்கு தான் வரவேண்டும் என முடிவெடுத்த பின்பும் அதில் மாற்றம் செய்யப்பட்டது இது உங்களுக்கு புரிகின்றதா? அவ்வாறிருக்க இவர்கள் இருவரும் கையொப்பமிட்டவுடன் எவ்வாறு ஒமந்தைக்கு கொண்டுவர முடியும் இதில் இன்னுமொரு விடயம் அந்த வாக்கெடுப்பில் தாண்டிகுளம் தான் சரியான தேர்வு என்று தாண்டிகுளத்திற்கு வாக்களித்தவர் தான் சத்தியலிங்கம் அவர்கள் சரி அது ஒருபுறம் இருக்கட்டும் இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஓர் நாடக்மென்பது இதிலிருந்து புலப்படுகிறதா? அல்லது ஓமந்தைக்கு வரப்போகிறது என்று அறிந்து கொண்டு அமைச்சர் சத்தியலிங்கத்தை தம் வசப்படுத்தவேண்டும் என்பதற்காக ஒரு சிலரால் அரங்கேற்றப்பட்ட நாடக மேடையா இது என்பது புதிராக உள்ளது

சரி யார் இந்த மகேஸ்வரன் என்று பார்போம் இதுவரை கேள்விப்படாத ஒரு புதுமுகமாகவே அனைவரும் பார்த்தனர் ஆனால் அவரோ தான் தந்தை செல்வாவுடன் கூட இருந்தவரென்றும் 30வருட போராட்டத்தில் கலந்து கொண்டவரென்றும் தன்னை காட்டிக்கொள்கிறார் அதேவேளை முதலமைச்சரின் செயளாளர் விஜயலட்சுமி அம்மாவை தனக்கு முன்னராகவே தெரிந்த நபர் போல் அமைச்சர் ஐங்கரநேசனிடம் ஒரு வாரத்தையை விட்டார் “விஜயலட்சுமி யார்?அவ யார் என்று எனக்கு தெரியும்”என்று குறிப்பிட்டார் அவர் அவ்வாறு குறிப்பிடுகையில் அவரது குரலின் தொணி விஜயலட்சுமி அம்மாவை கொச்சை படுத்துவது போல் தென்பட்டது அதுமட்டுமா முதலமைச்சர் அவர்கள் அமைச்சர் ஐங்கரநேசனின் தொலைபேசியூடாக மகேஸ்வரனை தொடர்பு கொண்டபொழுது “முதலமைச்சர் என்றால் கொம்பா?” என ஆக்ரோஷமாக கத்தினார்

சம்பந்தமே இல்லாமல் அத்துடன் முதலமைச்சருடன் உரையாட மறுத்துவிட்டார் இறுதியில்

இந்த மகேஸ்வரன் புங்குடூதீவை தன் சொந்த இடமாக கொண்டவர் ஓமந்தையில் நீண்ட வருடங்களாக குடிகொண்டுள்ளவர் மனைவி ஓமந்தையைச் சேர்ந்தவர் ஆனால் இருவரும் பிரிந்தே வாழ்கிறார்கள்

ஐயா மகேஸ்வரா உங்களிடம்:- இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்களே அப்பொழுது எங்கு போனது உங்கள் உணர்வு? அரசியல் கைதிகள் விடுதலை செய்வதாக கூறி தாங்கள் வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி நாடாத்தபட்டும் கைதிகள் விடுதலை இடம்பெறவில்லையே அப்பொழுது எங்கே போனது தங்களின் உணர்வு?

தமிழர்களின் காணிகளில் இன்னமும் சிங்கள படையினர் குடிகொண்டுள்னரே அதில் எங்கு சென்றது தங்களின் உணர்வு? அத்துமீறி சிங்கள குடியேற்றங்கள் இடம்பெருகிறதே அப்போது எங்கே உங்களின் உணர்வு?முன்னால் போராளிகள் மர்மமாக இறக்கின்றனரே அப்போது எங்கே உங்களின் உணர்வு? உணர்வுக்காக தமிழ்தேசியத்திற்காக வாக்களித்த நீங்கள் இப்பொழுது அபிவிருத்திக்காக உண்ணாவிரதம் அதும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முற்பட்டதின் இரகசியம் தான் என்ன?

பாவம் இதில் பங்காளிகளாக அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் அமைச்சர் குருகுல ராஜாவையும் இழுத்துவிட்டார்கள் இதில் இன்னுமொன்று இந்த நாடகத்தின் சூத்திரதாரியாக கருதப்படும் வவுனியா மன்னார் வீதி நான்காம் கட்டை சிறீ சத்தியலிங்கத்திடம் வாக்குவாதம் ஏற்பட்ட வேளை சம்பந்தன் நரியன் என்றும் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருந்தாலும் இது ஒரு அப்பட்டமான நாடகமென்று அனைவராலும் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது!

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com