பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.
எனினும், இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.
ஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ( 10.08.2016) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
ஓமந்தை பிரதேசசபைக்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இன் நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக ஓமந்தை பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் மதுரகன் இடம் கேட்டபோது உடல் நிலை அவ்வளவு பாதிப்பாக இல்லை எனவும் இருந்தாலும் சற்று சோர்வாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment