சுவாதியை குடும்ப குத்துவிளக்காக சித்தரிக்க ஒரு இளைஞனை பலியாக்க வேண்டுமா?

சுவாதியைக் கொன்றதாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்தான் உண்மையான குற்றவாளியா? இதிலும் காவல்துறையின் தில்லுமுல்லுகள் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ராம்குமார் கூறும் வார்த்தைகளை பாருங்கள்.


"நான் ஜவுளிக் கடையில் வேலை செய்தததால் என் ஒருதலை காதலை சுவாதி ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்.சுவாதி இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு அதே ரெயில் நிலையத்தில் 'பளார்', 'பளார்' என்று ஒரு இளைஞன் சுவாதியை அறைந்து இருக்கிறார்.
அந்த இளைஞன் தான் தற்போது கொலை குற்றவாளியாக காட்டப்படும் இளைஞன் என்று வேறொரு சாட்சி கூறுகிறது.


ஜவுளிக்கடையில் வேளை பார்க்கும் ஏழை இளைஞனுக்கு (அதுவும் கிராமத்தில் இருந்து வந்த 2 மாதத்தில்) வசதியான பெண்ணை பொது இடத்தில் அடிக்கும் அளவுக்கு எங்கிருந்து தைரியம் வரும்?


அப்படியே ராம்குமார் அடித்திருந்தாலும் சுவாதி ஏன் அவள் பெற்றோரிடம் கூறவில்லை? ஒருவேளை அவள் கூறி இருந்தாலும் அதை போலிசாரிடம் கூறாமல் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?


"தங்கள் மகள் கொல்லப்பட்டு இருக்கிறாள். குற்றவாளியை கண்டுபிடித்து தண்டியுங்கள்" என்று கதறுவதுதான் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் கதறலாக இருக்கும்.


மாறாக, சுவாதியின் பெற்றோர் "காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் எங்களை தொந்தரவு செய்கிறார்கள்" என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வேண்டிய மர்மம்‬ என்ன?


"எங்கள் மகள் இனி உயிரோடு வரப்போவதில்லை. அவளை பற்றி கண்டபடி விசாரணை என்ற பெயரில் இழிவுபடுத்தாதீர்கள்" என்று ஏன் முற்றுப்புள்ள வைக்க முயல வேண்டும்?


ராம்குமார் ஆடு மேய்த்தாராம். மாறு வேடத்தில் போலிஸ் புடிக்க வந்ததாம். டக்குன்னு ப்ளேடால் ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டாராம்.


அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், "ராம்குமார் வம்புதும்புக்கு போகாத நல்ல பையன். அவனை போலிஸ் புடிச்சுட்டு போகும் போது ஊர்ல கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க.


எதுக்குன்னு புரியல..." என்கிறார்கள்.


அட அதை விடுங்க. ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரால் பேச முடியாது என்கிறார்கள்.


தொண்டை பகுதியை அறுத்துக் கொண்டதால் 18 தையல் போடப்பட்டிருக்கிறது. மயக்க நிலையில் இருந்து தெளிந்த போது நான்தான் சுவாதியை கொன்றேன் என்று கூறிவிட்டு திரும்பவும் மயங்கி விட்டார் என்று போலிஸ் கூறுகிறது. பாவம் அந்த அப்பாவி இளைஞன்.


எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்து சுவாதியை கண்டு காதல் கொண்டு 2வது மாதத்தில் காதலை ஏற்கவில்லை என்று அவளை பளார் பளார் என்று பொது இடத்தில் அடித்து 10 நாட்களுக்கு பிறகு காதலை ஏற்கவில்லை என்று சுவாதியை கொல்ல முடியுமா?


சுவாதியை நடத்தை கொலை செய்ததை நாம் விமர்சிப்பதைப் போல் ஏழை இளைஞன் ராம்குமாரை நடத்தை கொலை செய்யாதீர்கள். முதலில் ராம்குமாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.


ஏழை இளைஞனுக்கு நடந்தது என்ன என்பதை அவனிடம் இருந்தே அறிய வேண்டும். அதுவரை அவதூறாளர்களே நீங்கள் எழுதுவதெல்லாம் உண்மை என நிரூபிக்க சம்பவங்களின் முரண்பாடுகளில் இருந்து உண்மையை கண்டெடுங்கள். விவாதமாக்குங்கள்... -


அவன் பேஸ்புக் ஐடிய நோண்டி பாத்தாலும் அப்பாவி மாறிதான். தெரியுது
செய்தி மூலம் முகநூல்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com