நல்லாட்சி அரசாங்கமும் தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சி முறைமையை வழங்க மறுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கம் கோரும் சந்திப்பொன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு உட்பட வன்னியில் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விளக்கம் கோருவதற்கான சந்திப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு நகரிலுள்ள வீரகத்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் கூறினார்.
இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment