வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை வரவழைத்து வழக்கு விசாரிப்பதற்கு தயாரில்லை – ஜனாதிபதி


எமதுநாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை வரவழைத்து வழக்கு விசாரிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு வசதியளிப்பதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையெனக் குறிப்பிட்டார்.



(07/09) பிற்பகல் பேராதனை ஸ்ரீசுபோதிராம விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத்  தெரிவித்தார்.



“இன்னும் இரு வாரங்களுள் யுத்த நீதிமன்றம் – வெளிநாட்டு நீதிபதிகளும் வருகை தரவுள்ளனர்” என்பதாக உள்நாட்டு ஞாயிறு வார இறுதிப் பத்திரிகை ஒன்றில் வெளியாகிய தலைப்பு தொடர்பாக கவலை வெளியிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டை திசைதிருப்பும் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை தான் வன்மையாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.



ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், இன்று சிலசமயங்களில் நாட்டில் தொழிற்படும் ஊடகங்களின் செயற்பாடுகள் தனக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனைகளில் யுத்த நீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லையெனத் தொரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகள் பற்றிக் கவனம் செலுத்துமாறு மாத்திரம் அதன் மூலம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.



26 ஆண்டுக காலமாக அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைளைத் தீர்த்து வைப்பதற்காக சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத ஒரு பணியினைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் சமத்துவம் மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்தி நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் இவ் வேலைத்திட்டத்தினை இன்று ஒருசிலர் விமர்சிப்பதாகத் தெரிவித்தார்.



பௌத்த மதத்தை போசிப்பதற்கும் நாம் உலகமக்களுக்கு வழங்க கூடிய மிகப்பெறுமதி வாய்ந்த தேரவாத பௌத்த சிந்தனையை பரப்புவதற்காகவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சர்வதேச பௌத்த பிரச்சார நடவடிக்கைகளுக்காக புதியதொரு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முப்பீடங்களைச் சேர்ந்த மகாசங்கத்தினரது அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.



பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் நிலை திரிபீடக சத்தர்ம சஜ்ஜாயனாவின் பூர்த்தி புண்ணியோத்சவம் மற்றும் சங்கைக்குரிய ஸ்ரீ தம்மாவாபிதான நாயக்க தேரரின் பிறந்த தின புண்ணியோத்சவம் இவ்வாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



வத்தேகம ஸ்ரீ தம்மாவாபிதான நாயக்க தேரருக்கு பரிசுப்பொருட்களை பூஜைசெய்து நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்கள், அன்னாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.



2560 ஆம் சம்புத்த ஜயந்தி ஸ்ரீ சுபோதி வெசாக் உத்சவக் குழுவினால் புண்ணியோத்சவம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அதன் தலைவர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவிற்கு இலங்கை மத்திய மாண்டலீஸ்வர மஹாமான்ய கௌரவ விருதுடன் கூடிய கௌரவ சின்னம் வழங்கிவைத்தல் இதன் போது ஜனாதிபதியின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது. உடரட்ட அமரபுர மஹா நிக்காயாவின் சங்கசபையினால் மத்திய மாகான முதலமைச்சருக்கு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.



ராஜகீய பண்டிதர் சங்கைக்குரிய அத்தராகம வஜிரஜோதாபிதான அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, அமைச்சர்களான லக்ஷ்மன் கிரிஎல்ல, மஹிந்த சமரசிங்கஆகியோரும் நந்திமித்திர ஏக்கநாயக்க, எதிரிவர வீரவர்தன, உள்ளிட்ட மாகாணத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச வாழ் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com