வவுனியா நகரிற்குட்பட்ட பிரபல்யமான பாடசாலைக்கு அருகில் தண்ணீர் தேங்கி காணப்படுகின்றது. தண்ணீர் போவதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அவ்விடத்திலிருந்து டெங்கு நுளம்பு பெருக்கு எடுப்பதற்கான அபாயமான இடமாக மாறிவருகின்றது.
சுமார் ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு அருகில் இவ்வாறு நுளம்பு பெருக்கு எடுக்கும் இடமாக காணப்படுவதால்; மாணவர்களின் பெற்றோர் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
பாடசாலையில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை எ;னறு பெறறோர் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அசமந்தப்போக்கு காரணமாக பாதிப்பக்குள்ளாகப்படுவது மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment