தமிழ் விருட்சம் மற்றும் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்தும் சர்வதேச தந்தையர் தினத்திற்கு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஊடகஅனுசரணை வழங்குவதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என குறித்த சங்கதின் நிர்வாககுழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர், பொருளாளர் தெரிவித்துள்ளனர்
குறித்த விடயம் சம்மந்தமாக நிர்வாக குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும்போது
வவுனியா மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் நலன் கருதியும் ஊடகவியலாரிடத்தில் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தவும் வளர்ந்து வரும் ஊடகவியலார்களை ஊடக அறிவு ஆக்கபூர்வமான செயர்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆனால் இன்று நிலமை மாறி வருகின்றது. எமது சங்கத்தில் அண்மைகாலமாக ஒருசில ஊடகவிலாளர்கள் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் சங்கத்தின் பெயரில் அரசியல் வாதிகளிடமிருந்தும் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் பொருட்கள் சலுகைகள் போன்றன பெற்றது தெரியவந்துள்ளது எதிர்வரும் காலத்தில் இதை சங்கம் அனுமதிக்காது
குறித்த விடயம் சம்மந்தமாக தலைவர் கருத்து தெரிவிக்கும்போது
இவ்விடயம் சம்மந்தமாக எமக்கு ஏதும் தெரியாது சங்கத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்
குறித்த விடயம் சம்மந்தமாக பொருளாளர் கருத்து தெரிவிக்கும்போது
நாங்கள் அனுசரணை வழங்கவில்லை இது எனக்கு மட்டுமல்ல தலைவருக்கோ ஏனைய நிர்வாக குழு உறுப்பினருக்கோ தெரியாமல் நடாத்தப்படும் செயற்பாடு இது என தெரிவித்தார்
0 comments:
Post a Comment