பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான ஒழுக்க விதி கோவையை தயாரிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற அமர்வொன்றின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் இணைந்து செயற்படும் போது பொலிஸார் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் உள்ளிட்ட பல விதிகளை உள்ளடக்கி இந்த ஒழுக்க விதிக் கோவை தயார் செய்யப்படவுள்ளது.
பொதுமக்கள் மீதான பொலிஸாரின் பொறுப்புகள் குறித்து புதிய ஒழுக்க விதிக் கோவையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஆரியதாச குரே கூறியுள்ளார்.
புதிய ஒழுக்க விதிக் கோவையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் கையெழுத்து பெறப்படும் எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment