இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது.
* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.
* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.
* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.
* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.
0 comments:
Post a Comment