வவுனியா இளைஞரின் இரண்டாவது கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையின் பிரபல்யமான நிறுவனம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
மின்சாரம், எரிபொருள், ஆளனி இன்றி செயற்படும் வகையில் புதிய நவீன முறையினை பயன்படுத்தி தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளதாகவும் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் விவசாயத்தில் ஒரு புரட்சியினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது அத்துடன் விவசாயிகளுக்கு ஒரு உந்து சக்தியாக எதிர்காலத்தில் இருக்கும் என்றும் இக்கண்டுபிடிப்பாளர் என்.என். ஜக்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தனது மாற்றுத்திறனாளிகளுக்கான மலசல கூடத்தினை புதிய வடிவமைப்பில் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையினை வழங்கியிருந்ததுடன் தனது கண்டுபிடிப்புக்களை இலங்கையில் இருக்கும் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று பத்திரிகைகளில் தொவித்ததையடுத்தே இன்றைய புதிய கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையிலிருக்கும் நிறுவனமான ((Eastern Eagle Property Developer (pvt) Ltd Srilanka) பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. திமந்த கருணாரட்ன கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் உலகத்தில் முதற்தரமாக கண்டுபிடிப்பு என்றும் இதனை தமது நிறுவனத்தினூடாக தொழிநுட்பத்தினை பெற்றுக் கொண்டுள்ளது தனது நிறுவனத்திந்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment