ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியுடன் இணைந்ததொழிற்சங்க செயற்பாட்டின் மிகப்பெரும் ஜாம்பவானான அலவிமௌலானா அவர்களின் மறைவு இலங்கையின் தொழிற்சங்கசெயற்பாட்டுக்கும் ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சிக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
இத்தகைய போராட்ட உணர்வுள்ள செயற்பாட்டாளர்கள் மிகமிக அரிதாகவே உருவாகின்றனர்.
தாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக தமது உயிரைப் பணயம் வைத்துமுன்னணியில் நின்ற அலவிமௌலானா அவர்கள் தாம் ஒருமுன்மாதிரியான தொழிற்சங்கசெயற்பாட்டாளர் என்பதைபல சந்தர்ப்பங்களில் அச்சமின்றி முன்வந்து நிரூபித்திருக்கின்றார்.
தொழிற்சங்கப் போராட்டங்களில் தமது கடமைப்பொறுப்புக்களை முன்னின்றுநிறைவேற்றிய அலவிமௌலானா அவர்கள் ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையேமிக நெருங்கிய தொடர்பைப் பேணுவதில் ஒருமுக்கிய பங்கைவகித்தார்.
உண்மை,நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன அவரிடம் காணப்பட்டமிகமுக்கியபண்புகளாகும். மேலும் சிங்களமொழியைக் கையாள்வதிலும் அம்மொழி மூலமானதொடர்பாடலிலும் அவர் வியக்கவைக்கும் வகையில் திறமைபெற்றிருந்தார்.
போலித்தன்மையற்ற மிக எளிமையானபண்பைக் கொண்ட இந்த போராட்ட உணர்வுமிக்க தொழிங்சங்கத் தலைவர் ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் சிக்கலற்ற இருப்புக்காகவழங்கியபங்களிப்பைஒருபோதும் மறந்துவிடமுடியாது. கட்சியின் வரலாற்றில் அவர்வகித்தவகிபாகம் அவருக்கேயுரியதனித்தன்மையானஒன்றாகும்.
முன்னால் அமைச்சரும் முன்னால் மேல் மாகாணஆளுநரும் எமதுநெருங்கியஅரசியல் சகாவுமானகாலம்சென்றஅலவிமௌலானாஅவர்களுக்குஎனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனாதிபதி
மைத்ரிபாலசிறிசேன
0 comments:
Post a Comment