சூழலைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்கு அதனை பாதுகாப்பானதாக கையளிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது எல்லா அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த யுகம் சுற்றாடலைக் கவனத்திற் கொள்ளாதிருப்போர் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய ஒரு யுகமாகும் எனக் குறப்பிட்ட ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் வகையில் சட்டவிரோதமாக செயற்படுவபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு பிரதேசத்தில் சுற்றாடல் அழிவுகளுக்கு இடமளிக்கப்படுமானால் அது அப்பிரதேச பொலிஸார், பிரதேச செயலாளர் உள்ளிட்ட சுற்றாடல் அதிகாரிகளின் பொறுப்பு குறித்த ஒரு பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சூழல் அழிவுகளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களுடன் இணைந்து சூழலைப் பாதுகாப்பதற்காக தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு எல்லா அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுற்றாடல்துறை அமைச்சராக தாம் நாட்டில் முதன்முறையாக சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக முப்படையினரின் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதையும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.
பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஒரு ஆவணம் பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. அமர ஜயந்த அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மகாவெலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகாரிசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கே எச் முத்துகுடஆரச்சி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment