வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறு நீரக நோய் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இத்திட்டமானது ஜனாதிபதி செயலாக்க செயலணி சிறுநீரக நோய் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சமூகத்தை இந்த நோயிலிருந்து பாதுகாக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் இன்று 12-06-2016 மாலை 4.00 மணிக்கு போகஸ்வவ கிராமத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியை வவுனியா சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் மற்றும் சிங்கள பாரம்பரிய நடனக் குழுவினரும் வரவேற்பு நடனத்துடன் வரவேற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி சிறு நீரக நோய் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய வவுனியா போகஸ்வவ கிராமத்திற்கான குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் திறந்து வைத்தார்.
மற்றும் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன்; மாவட்ட ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஜனாதிபதியால் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.
நிகழ்வில் மதகுருமார்கள்,வடமாகாண ஆளுனர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு ஆதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், சிறுநீரக நோய் நிவாரண செயலணியின் பணிப்பாளர், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment