வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தோனேசியாவின் 'சங்க தேரவாத இந்தோனேசியா' அமைப்பும் லயன் எயார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரர் ஆகியோரினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிதியுதவி இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் 'சங்க தேரவாத இந்தோனேசியா' அமைப்பு மற்றும் லயன் எயார் நிறுவனத்தின் தலைவர் அவர்களும் இருபத்தைந்து இலட்சத்து ஆறாயிரம் ரூபாவையும் பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரர் அவர்களினால் ரூபா ஐந்து இலட்சம் ரூபாவும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த நிதியுதவியை பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ. பீ அபேகோன், பெல்லன்வில எசல பெரஹர குழுவின் தலைவர் எச். டீ பிரேமசிறி, உப தலைவர் மஹிந்த மடிகஹேவா, செயலாளர் கேசர லால் குணசேகர, பொருளாலர் ரூபன் விக்ரம ஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
0 comments:
Post a Comment