வவுனியா மகாறம்பைக்குளத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் ஒரு குடும்பம் ஒன்று வசித்து வருகின்றனர்.
7பேரைக்கொண்ட இக்குடும்பம் அதிகமாக பெண் பிள்ளைகளை கொண்டதாக காணப்படுகின்றது. இக் குடும்பத்தினருக்கென ஒரு மலசலகூடம் கூட அற்ற நிலையில் வாழ்கின்றமை மிகவும் மன வருத்தத்திற்குறிய விடயமாகும். வீட்டிக்கு அருகே காணப்படும் காட்டுப்பகுதியிலேயே தங்களது இயற்கை தேவைகளை கழிப்பதுடன் மழை காலத்தில் குறித்த கொட்டகை வீட்டிவ் வசிக்க முடியாத நிலையில் இக் குடும்பத்தின் வறுமை காட்சியளிக்கின்றது.
இவ் விடயத்தினை கேள்வியுற்ற அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் திரு.ரி.என் சூரியராஜா அவர்களும் அவர்சார் ஊழியர்கள் தனராஜ்,பாலமுரளி ஆகியோர் அவ் குடும்பத்தின் நிலமையினை நேரின் சென்று பார்வையிட்டதுடன் உடனடி உதவியாக உலர் உணவு பொதிகள், பாய்,பெட்சீட் , இரு தரப்பால் என்பவற்றை வழங்கினார்.
மேலும் வீட்டிற்கு மேலே 33000 வோல்ட் லக்சபான மின்சாரம் பாயும் காணியில் அவர்கள் இருப்பதால் கள்ளிக்குளத்தில் அவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
0 comments:
Post a Comment