ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர்.
தகவல் 1
அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.
தகவல் 2
முக்கியமாக திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மாதவிடாய் நாட்கள் முடிந்த 4வது நாளில் இருந்து எட்டு நாட்களில் உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கருவளம் நன்றாக இருக்கும்.
தகவல் 3
பெண்ணுறுப்பு சிலருக்கு லூசாக இருக்கிறது எனில் அவர் முன்பே பலமுறை உறவில் ஈடுபட்டவர் என்று பொருளல்ல. அனைத்து பெண்களுக்கும் பெண்ணுறுப்பு வெவ்வேறு மாதிரியான வடிவில் தான் இருக்கும். சிலருக்கு மிக இறுக்கமாக இருப்பது எப்படி இயல்போ, அப்படி தான் சிலருக்கு சற்று லூசாக இருக்கும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பு எலாஸ்டிக் போன்று விரிந்து , சுருங்கும் தன்மையுடையது என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தகவல் 4
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மிகுந்த வலி ஏற்படும். இந்த நாட்களில் அவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாமல் கூட கோபப்படுவார்கள். அதை நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
தகவல் 5
மார்பகங்கள்! பெண்களின் மார்பகங்கள் ஒருபக்கம் பெரிதாகவும், ஒரு பக்கம் சற்று சிறிதாகவும் தான் இருக்கும், இது இயல்பு. இதை உடலில் ஏதோ பிரச்சனை அல்லது தவறாக எண்ண வேண்டாம். பெரியளவில் மாற்றம் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வதில்லை தவறில்லை.
தகவல் 6
வேகம் தவறு! பார்ன் படங்களில் பார்ப்பது போல வேகமாக உறவில் செயல்பட வேண்டும். மற்றும் வேகமாக செயல்பட்டால் அவர்கள் விரும்புவார்கள், உச்சம் அடைவார்கள் என்பதும் தவறான கருத்து. உண்மையில் இது அவர்களுக்கு வலி மிகுந்ததாக தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
தகவல் 7
ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்களின் தேகத்தில் வளரும் முடி வேகமாக வளர்கிறது. பெண்கள் அதிகமாக ஷேவிங் செய்கிறார்கள் எனில், அதற்கு காரணம் இது தான். திருமணதிற்கு பிறகு ஆண்கள் இதை முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தகவல் 8
பெண்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அழகு தான்! அதை நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். கேலி கிண்டல்கள் எப்போதாவது இருக்கலாம். ஆனால், எப்போதுமே அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்வது தவறு.
தகவல் 9
அவர்கள் சின்ன விஷயத்துக்கு கோபப்படலாம், சந்தேகம் கூட கொள்ளலாம். ஆனால், நீங்கள் அப்படி செய்யக் கூடாது. இது என்ன நியாயம் என்று கேட்க வேண்டாம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மூட் ஸ்விங்-ன் போது இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவர்களின் மனநிலை உடல்நிலையை சார்ந்தது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment