வவுனியாவில் பொது இடத்தில் புகைப்பிடித்த நபர் ஒருவருக்கு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றத்தில் 2500ரூபா தண்டப்பணம் குற்றமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
கடந்த திங்கட்கிழமை வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின்போது ஆலய சூழலில் புகைப்பிடித்த நபர் ஒருவரை அங்கு கடமையிலிருந்த ஓமந்தை பொது சுகாதார பரிசோதகர் கே. சிவரஞ்சன் தலைமையில் சென்ற குழுவினாரால பொது இடத்தில் ஆலய சூழலில் ஆலய சுகாதாரத்திற்கு ஊறுவிழைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த புதன்கிழமை வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 2500ரூபாவினை தண்டமாக செலுத்துமாறு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே இடத்தில் இரு வியாபார நிலையத்தில் இனிப்புப் பண்டங்களை திறந்த நிலையில் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவருக்கு தலா 5000ரூபா குற்றப்பணமாக செலுத்துமாறு வவுனியா மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளதாவுகம் ஆலய உற்சவ காலத்தில் கடமையிலிருந்த ஓமந்தை பொது சுகாதார பரிசோதகர் கே. சிவரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment