கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த 2 மேலதிக ஆசனங்களில் முஸ்லிம் பிரதிநிதியான அஷ்மினுக்கு வழங்கப்பட்ட ஆசனம் போக எஞ்சிய ஒரு ஆசனம் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடையே பகிர்வதென உடன்பாடு எட்டப்பட்டு தமிழரசுக்கட்சி , மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.ஆகியவற்றிற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அவர்களுக்கான காலம் நிறைவடைந்த நிலையில் ரெலோவுக்கு வழங்கப்பட வேண்டிய சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரனுக்கு வழங்கப்போவதாக சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்றய தினம் அந்த ஆசனம் ரெலோ சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 10007 வாக்குகளைப் பெற்றிருந்த 31 வயதான செந்தில்நாதன் மயூரனுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
வவுனியாவின் இளைஞரான இவர் தனது 28வது வயதில் [2013] வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தொல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment