இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட மற்றும் பாடசாலைப் பரீட்சகர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையில் விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி மே மாதம் 31 ஆம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலைமையினைக் கருத்தில் கொண்டு இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment