வவுனியா வைத்தியசாலையில் விடுதியில் தாதிய உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நான்கு இளைஞர்களை நேற்று இரவு பொலிசார் கைது செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தொவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா வைத்தியசாலையில் விபத்துப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்களாக கடடைபுரியும் இருவருக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவரும் நோயாளரை பார்வையிட வந்த இளைஞர்கள் சிலர் நோயாளரை வைத்தியர் பார்வையிடும் நேரத்தில் விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்ததையடுத்து இவ் இளைஞர்களை வெளியேறுமாறு தாதிய உத்தியோகத்தர்கள் பணித்தபோது தாதிய உத்தியோகத்தருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்ததைகளை பிரயோகித்துதையடுத்து ஏசியுள்ளார்.
அந்த நேரத்தில் நோயாளரை பார்வையிட்டுக்; கொண்டிருந்த வைத்தியர் வைத்தியசாலை பொலிசாரிடம் இளைஞர்கள் விடுதிக்குள் இடையூறு ஏற்படுத்துவதாக முறையிட்டதையடுத்து நான்கு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். எனினும் தாதிய உத்தியோகத்தரை தாகாத வார்த்தைகள் கூறி ஏசியதையடுத்து வைத்தியரால் வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நான்கு இளைஞர்களை கைது
அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால்; வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுப்போவதாகவும் தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விடுதி தாதிய உத்தியோகத்ர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது கடமைகளுக்கு ஏற்;படுத்தப்பட்ட இடையூறு தொடர்பாக முறையிட்டதையடுத்து நேற்று இரவு குறித்த நான்கு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்hக்ளின் செயற்பாடுகளுக்கும் அவர்களின் கடமைகளை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியுள்ள இளைஞர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் இனிமேலும் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தொவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment