நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வவுனியாவில் 1377 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து எண்பத்து நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது
இவ்வாறான அனர்த்தத்திற்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கவும் அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கே கே மஸ்தாதான் தெரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் –
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அவசரகால நிலையில் கடமையாற்றவும் கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் துரிமாக செயற்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
வன்னிப்பிரதேசத்தில் அனத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு இன்று அதிமேதகு ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன்
மக்களுக்கு உதவிகளை வழங்க வெளிநாட்டு தூதுவர்களுடன் பேசியுள்ளதாகவும் அவர் ஊடகத்திற்கு வழங்கிய ஊடக அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது
0 comments:
Post a Comment