நடுவானில் காணாமல்போன ஈஜிப்ட்ஏர் எம்எஸ்804 விமானத்தின் சிதிலங்கள் கிரேக்கத் தீவான கர்பெதஸின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என எகிப்திய விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாரிஸிலிருந்து 66 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கெய்ரோவுக்கு சென்றுகொண்டிருந்த அந்த விமானம் புதன்கிழமை நள்ளிரவு காணாமல் சென்றது.
புதன்கிழமை நள்ளிரவு விமானம் மாயமாக மறைந்தது.
எகிப்திய அரசு தற்போது தனது நடவடிக்கையை “தேடுதல் மற்றும் மீட்பு” நடவடிக்கையாக மாற்றியுள்ளது என்று துணை அதிபர் அஹ்மத் அடேல் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அந்த விமானம் நொறுங்கி விழுவதற்கு தொழில்நுட்ப கோளாறுகளை விட பயங்கரவாத செயல்பாடே முக்கியக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
நடுவானில் திடீரென இரண்டு திருப்பங்களை மேற்கொண்ட அந்த விமானம் எதிர்பாராத வகையில் 25,000 அடி உயரத்தை இழந்து, மத்தியத்தரைக்கடலில் விழுந்தது என்று கிரேக்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் பானோஸ் கமேனோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த விமானத்தின் சிதிலங்களை தேடிக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் திவிரமாக முன்னெடுக்கும்படி நாட்டின் விமானத்துறை மற்றும் இராணுவத்தினருக்கு எகிப்திய அதிபர் ஃபதாஹ் அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.
காணாமல்போன தமது விமானத்தின் சிதிலங்கள் கர்பெதஸ் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை எகிப்திய விமானத்துறையினர் உறுதிசெய்துள்ளதாக, ஈஜிப்ட்ஏர் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment