யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமாடுகள் வழங்கினால், வாழ்க்கை மாறுமா? ஆடு, மாடுகள் வழங்கினால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாது.
யுத்தத்தில் இறந்து போனவர்களின் கால் நடைகள் பெருமளவில் வன்னி பெரு நிலப்பரப்பிலிருந்து கடத்தப்படுவதாகவும், உணவுக்காக திருடர்களால் வெட்டப்படுவதாகவும் மக்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாடுகள் வழங்கியதாகக் கூறி கிளிநொச்சியில் 29பேருக்கு இராணுவத்தினர் மாடுகளை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வன்னி பெருநிலப்பரப்பில் யுத்தத்தின் கோரத்தாண்டவத்தில் அகப்பட்டு குடும்பத் தலைவர்களை, பாதுகாவலர்களை இழந்தும், அங்கங்களை இழந்தும் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் அரசியல் தீர்மானங்களாக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும், தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
புதிய அரசை ஆட்சி பீடமேற்றியதாகக் கூறுகின்றவர்களும், வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளாக அர்த்தமற்ற தீர்மானங்களை நிறைவேற்றி செயலிழக்கச் செய்து கொண்டிருப்பவர்களும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் மற்றும் அவலங்கள் தொடர்பாகவும் எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களை வகுக்காமலும், செயற்படுத்தாமலும் இருப்போர் மீதே மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
ஆட்சி அதிகாரங்களையும், பதவிகளையும் பெற்றுக் கொண்டு, தனிமனித பெருமிதங்கள் பேசிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாலேயே, ஆடு, மாடுகள் கொடுத்தால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்று சிலர் எண்ணுகின்றார்கள்.
இதற்குத்தானா?
தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்? என தனது முகநூல் பக்கத்தில் டக்லஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .
0 comments:
Post a Comment