தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக செல்வி ஜெ.ஜெயலலிதா தெரிவாகியமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.
யாழ். எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் இ.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தவராவார்.
யாழ்.கல்வியங்காட்டு சந்தியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரதீபம் காட்டிய பின்னர் சிலைக்கு முன்பாக வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்.
குறித்த நபர் எம்.ஜி.ஆரின். பிறந்த தினம் மற்றும் இறந்த தினங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment