அரசாங்கம் விரைவில் தம்மை கைது செய்யும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதல்வரான நாமல் ராஜபக்ஸ, சகோதரர்களான பசில் ராஜபக்ஸ, கோதபாய ராஜபக்ஸ ஆகியோரையும் அரசாங்கம் கைது செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தம்முடன் விமல் வீரவன்சவும் கைது செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் பிளவினை ஏற்படுத்த தாம் அனுமதிக்கப் போவதில்லை என அவா் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் ராஜபக்ஸக்கள் எவ்விதமான தொடர்புகளையும் பேணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா அல்லது நாட்டை ஐக்கியப் படுத்த வேண்டுமா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment