வவுனியா வர்த்தக சங்கம் வர்த்தகர்களின் நன்மை கருதியும் பொது மக்கள் இலகுவில் வர்த்தக சங்கத்தினரை சந்திக்கவும் வசதியாக தற்பொழுது முதலாம் குறுக்குத் தெருவில் சிற்றி கட்டிடத் தொகுதியில் முதலாம் மாடியில் இயங்கிவருவதாகவும் பொது மக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வந்து செல்வதற்கும் வசதியாகவே இவ்விடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக வர்த்தக சங்கம் தனது செயற்பாட்டினை பஸார் வீதி, குளோப் கட்டிடத் தொகுதியில் வழங்கி வந்தது. எனினும் இடவசதி இன்மை மற்றும் பொதுமக்கள் வர்த்தக சங்கத்துடன் நல்லுறவிணைப் பேணும் முகமாகவும் இவ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் மேலும் தொவித்தார்.
0 comments:
Post a Comment