இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மனித உரிமை பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு ஒன்றை மே மாதம் 20ம், 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளது.
இச்செயலமர்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்குப்பற்றமுடியும் என்பதுடன் கிளிநொச்சியிலிருந்து பங்குப்பற்றும் ஊடகவியலாளர்களுக்கு தங்குமிட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயலமர்வில் பங்குப்பற்ற விரும்பும் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தங்களது பெயர் விபரங்களை எதிர்வரும் 11.05.2016ம் திகதிக்கு முன்னர் த.கனகராஜ், பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல.01, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம். என்னும் தபால் முகவரிக்கோ அல்லது பெக்ஸ் -021-2222021 அல்லது hrcjaffna@sltnet.lk என் ற மின்னஞ்சல் முகவரிக்வோ அனுப்பி வைத்து பங்குபற்றலை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் ஊடகத்துறையிலுள்ளவர்களை மாத்திரம் பங்குபற்றுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கேட்டுள்ளார்.
இச்செயலமர்வில் பங்குப்பற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆணைக்குழுவின் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment