பொதுத்துறையில் கடமையாற்றி வரும் நிறைவேற்று அதிகார தரமுடைய அதிகாரிகளுக்கு தீர்வைச் சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஆறு ஆண்டுகள் நிறைவேற்றுத் தரத்தை உடைய அரசாங்க ஊழியர்களுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment