வவுனியா வளாகம் யாழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சந்தை இன்று காலை வவுனியா பல்கலைக்கழகம் பம்பைமடு வளாகத்தில் காலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதல்வர் வவுனியா வளாகம் கலாநிதி த. மங்களேஸ்வரன், வியாபார கற்கைநெறி பீடாதிபதி கலாநிதி அ. புஸ்பநாதன், பிரயோக விஞ்ஞான பீடம் பீடாதிபதி திரு. சி. குகநேசன், தலைவர் தொழிற்சந்தை ஏற்பாட்டுக்குழு கலாநிதி ர. நகுலன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
இன்று 27.05.2016 அனைத்துப் பட்டதாரிகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும் நாளை 28.05.2016 அணைத்து தொழில் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்காகவும் இடம்பெறவுள்ளது காலை 9மணி முதல் மாலை 4மணிவரையும் இடம்பெறும்.
0 comments:
Post a Comment