கொலன்னாவையிலுள்ள மக்களுக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் எஸ்.பி திசாநாயக தலைமையில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவ மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டி ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை கொலன்னாவ மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் இப்பொழுது அரசியல் வாக்குவாதங்கள் புரிவதை நிறுத்திவிட்டு யாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியுமோ அவர்கள் மனிதநேயத்துடன் செயற்ப்படுதலே காலத்தின் தேவையாவுள்ளது, அந்த வகையில் நான் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவ மக்களுக்கும் உதவுவேன் என்றதுடன் அதன் முதற்கட்டமாக இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 உலர் உணவுப்பொதிகளை தருவதாகவும் கூட்டத்தின்போது வாக்குறுதியளித்தார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சர் ஏ .எச்.எம் .பௌசி பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார். தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment