பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகக்கொண்ட சோமசுந்தரம் டிகுணதாசனின் இழப்பு பாண்டியன்குளம் பிரதேச மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் பேரிழப்பாகும்.
இவர் பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வி முதல் க.பொ.த. உயர்தரம் வரை கற்று, தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் 2004ம் ஆண்டு தன்னையும் ஒரு போராளியாக இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் 2009ம் ஆண்டு இறுதிவரை பாடுபட்ட ஒருவர்.
இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருடங்கள் தடுப்பிலிருந்து பல்வேறுபட்ட சித்திரவதைகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டு, பாண்டியன்குளம் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையை பொறுப்பேற்று, போரினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு தனது அதிகார வரம்புக்கு அப்பால் சென்று இரவு பகல் என்று நேரம் பாராமல் சேவையாற்றியது மட்டுமல்லாமல், வசதி வாய்ப்பு உள்ளவர்களிடம் சென்று உதவிகோரி இல்லாதவர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுப்பதை சுபாவமாக கொண்டிருந்தார்.
தமிழ்த்தேசிய பற்றாளன், நேர்மை கண்ணியம், துணிச்சல் கொண்டவர். இப்படிப்பட்ட நல்ல மனிதநேயப் பண்பாளனை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கு (பாண்டியன்குளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்) எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ந.சிவசக்தி ஆனந்தன், பா.உ,
வன்னி மாவட்டம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு.
0 comments:
Post a Comment