இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த கூட்டணி மிகவிரைவில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்று இயக்குனர் அட்லி கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பரதன் இயக்கி வரும் ‘விஜய் 60’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்-அட்லி இணையவுள்ளதாகவும், இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘அசல்’ படத்திற்கு பின்னர் கடந்த ஆறு வருடங்களாக சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வேறு படங்களை தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment