வவுனியா மறவன்குளம் பகுதியில் வெங்காய வெடியினை பாக்கு என எண்ணி சுத்தியலைக் கொண்டு தாக்கும் போது வெங்காய வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மறவன்குளம் பகுதியில் சைக்கில் திருத்தும் கடையினை நடாத்திவரும் ஆறு பிள்ளைகளின் தந்தையான சி. திருச்செல்வம் 44வயது ஒரு நபரிடம் விலை கொடுத்து பாக்கு வாங்கியுள்ளார்.
அதற்குள் வெங்காய வெடியினை மறைத்து பாக்குமாதிரியான தோற்றத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது. எனினும் குறித்த குடும்பஸ்தர் அதனை பாக்கு என நினைத்து சுத்தியலைக் கொண்டு தாக்கியபோது வெங்காய வெடி வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் இரு கையின் விரல்களும் சிதறிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் நெடுங்கேணியிலிருந்து இறுதியுத்;தில் கால் ஒன்றினை இழந்து விஷேட தேவைக்குட்பட்ட நிலையில் சைக்கில் திருத்தும் நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்றார்.
0 comments:
Post a Comment