வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவில்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்கூறியுள்ளார்.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின்தலைவர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது விட யமாகமுதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,முல்லைத்தீவுமாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில்மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை கூறியிருக்கின்றனர்.
இதனடிப்படையில்முதலமைச்சரின்செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மீன்பிடி அமைச்சின் செயலாளர் மற்றும்பேராசிரியர் சூசை ஆனந்தன் ஆகியோரின் இணைப்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் அதிகாரசபை ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment