பெண்களின் உடற்கூறு சார்ந்தும், மனதை சார்ந்தும் சில விஷயங்களில் ஆண்களுக்கு காலம், காலமாக சில குழப்பங்கள் விடையில்லாமல் நீடித்து வருகிறது. என்னதான் நெருங்கிய தோழியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் கூட இந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.
உடற்கூறு சார்ந்த ஓரிரு குழப்பங்கள் திருமணத்திற்கு பின்னாளில் சில காலத்தில் தீர்வடையும். உதாரணமாக பெண்களின் மாதவிடாய் மற்றும் மூட் ஸ்விங்ஸ் போன்றவை பற்றி திருமணத்திற்கு பிறகு தான் ஆண்கள் ஓரளவாவது தெரிந்துக் கொள்கின்றனர்.
குழப்பம்
பொதுவாகவே ஓர் ஆண் திருமணத்திற்கு முன்பு வரை மாதவிடாய் பற்றி ஓரளவு கூட அறிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. காதலித்திருந்தால் கொஞ்ச விஷயங்கள் அறிந்து வைத்திருக்கலாம். இதற்கு காரணம் நமது சமூகத்தில் ஆண்கள் மாதவிடாய் பற்றி பேசுவது கூடாத ஒன்றாக பாவித்து வைத்திருப்பது தான்.
இதனாலேயே திருமணமான பிறகு தன் மனைவியின் மாதவிடாய் நாட்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி நடந்துக் கொள்ள கூடாதுஎன ஆண்களுக்கு தெரிவதில்லை. பிறகு முட்டி மோதி சிலபல மாதங்கள் கடந்த பிறகு தான் சிலர் மாதவிடாய் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்கின்றனர்.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் வலி, மூட் ஸ்விங்ஸ் மற்றும் அதனால் அவர்கள் மத்தியில் அந்த மூன்று நாட்களில் மட்டும் அதிகரிக்கும் கோபத்தை பற்றியாவது ஆண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழப்பம் 2
காதலில் மட்டுமல்ல, இல்லறம், நட்பு, உறவுகள் என அனைத்திலும் பெண்களின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும், சீப்பை மட்டும் எங்கே வைத்தேன் என்பதை மறந்துவிடுவார்கள். பெண்களின் நினைவாற்றலை பாராட்டியே ஆகவேண்டும்.
படித்தவர்களாக இருப்பினும் சரி, படிக்காதவர்களாக இருப்பினும் சரி, பெண்களிடம் இருக்கும் இந்த நினைவாற்றலுக்கு குறைவே இல்லை. அதிலும், முக்கியமாக காதலன் / கணவன் எப்போது திட்டினான், எதை வாங்கி தர மறுத்தான். அவனது தங்கை, அம்மா எப்போது குறைகூறினார்கள் என்பதெல்லாம் எந்த மென்பொருள் கொண்டும் அழிக்க முடியாது.
குழப்பம் 3
ஆண்களை விட பெண்கள் கிண்டல், கேலி செய்து சாவடிப்பதில் வல்லமை பெற்றவர்கள். ஆண்கள் மத்தியில் மக்கு போல நடந்துக் கொண்டாலும், ஆண்களின் செயல்பாடுகளை தோழிகளுடன் நார் நாராக கிழித்து தோரணம் கட்டிவிடுவார்கள்.
எப்படி பெண்களால் மட்டும் இப்படி பல முகங்களுடன் திகழ முடிகிறது என்பதே ஓர் ஆச்சரியம் தான். ஆண்களால் தங்கள் பாவனை, குணங்களை எளிதாக மறைக்கவோ, வெளிப்படுதாமல் இருக்கவோ முடியாது. ஆனால், பெண்கள் அடக்கமாகவும் இருப்பார்கள், அடங்காமல் லூட்டி அடிக்கவும் செய்வார்கள்.
குழப்பம் 4
ஆண்களை பொறுத்தவரை ஓராண்டுக்கு ரெண்டு ஜீன்ஸ், நான்கு சட்டை போதுமானது. அதையே வருடம் முழுக்க போட்டு கிழிப்பார்கள். ஆனால், பெண்களால் மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு உடை வாங்காமல் இருக்க முடியாது.
இது மட்டுமில்லாமல், அந்த உடைக்கு ஏற்றார் போல உபகரணங்களும் வேண்டும் என சிலர் அடம்பிடித்து வாங்குவார்கள். பேரன், பேத்தி எடுத்தாலும் கூட இதில் பெண்களின் குணம் மாறாது. அப்படி என்ன தான் இருக்கிறது உடையில்? ஏன் இப்படி இதன் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார்கள் என்ற குழப்பம் அனைத்து ஆண்கள் மத்தியிலும் இருக்கிறது.
0 comments:
Post a Comment