வவுனியா ஓமந்தை கமநல கேந்திரநிலையத்திற்குட்பட்ட அரசமுறிப்பு குளம் கடந்த சில தினங்கள் பெய்தமழை காரணமாக நீர் தேங்கி அணைக்கட்டடில் உடைப்பு ஏற்ப்பட்டுள்ளது
நேற்று (19.05.2016) ஏற்பட்ட உடைப்பினால் குறித்த குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை பண்ணப்படும் 30 விவசாயிகள் சிறுபோகம் செய்யமுடியாமல் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
மொத்தமாக 94 ஏக்கர் வயற்காணிக்கு சொந்தமான 30 விவசாயிகளை உள்ளடக்கிய இக்குளமானது 1954ம் ஆண்டுக்கு பின் புனரமைக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
குளம் புனரமைப்பு தொடர்பில் கிராமவாசிகளால் தமிழ் அரசியல் வாதிகள் தொடக்கம் உயர்மட்ட அரச அதிகாரிகள் வரைக்கும் பல கடிதங்களை அனுப்பிவைத்தபோதும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறாததால் மனமுடைந்து போய்யுள்ளதாக குறித்த கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment