பொகவந்தலாவ – ஆரியபுற பகுதியில் 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) சனிகிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி கடந்த மாதம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment