வவுனியா குட்செட் வீதியில் 23.04.2016 காலை கைக்குண்டு மற்றும் கட்சி சார்ந்தஅடையாள அட்டை ஒன்றும் வவுனியா பொலிசாரினால் மிட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா குட்செட் வீதி அமைதி அகத்திற்கு அருகே காணப்படும் சிறிரேலே இளைஞன் அணியின் தலைவரின் இல்லத்திற்கு முன்பாக காணப்படும் மதகிக்கு அருகே சிறிய பையினுள் சந்தேகத்திற்கு கிடமான பொருள் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தெரிவித்தமையை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அந்த சந்தேகத்திற்கு கிடமான பையினை திறந்த பொழுது கைக்குண்டு மற்றும் கட்சி சார்ந்த அடையாள அட்டை ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சிறிரேலே கட்சியின் இளைஞன் அணி தலைவர். கருத்து தெரிவிக்கையில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இருவரால் தன்னை பழிவாங்கும் முகமாக இதை செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தனது அடையாள அட்டை ஒன்றையும் அதனுள் வைத்துள்ளதாகவும் தனக்கும் தனது கட்சி செயலாளருக்கும் இவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாக செயாலாளரினால் காவல்துறையில் முறைப்பாடு ஏற்கனவே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது பற்றிய மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
0 comments:
Post a Comment