இந்தி பட உலகின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து உலகம் அறிந்த நடிகை ஆகி இருக்கிறார்.
‘குவான்டிகோ’ என்ற ஆங்கில டி.வி. தொடரில் நடித்து அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பிரபலமான பிரியங்காசோப்ரா, ‘பேவாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார்.
ஆங்கில டி.வி. தொடர் மற்றும் ‘ஹாலிவுட்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரியங்கா சோப்ரா ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், விருது கொடுக்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக தேர்வு ஆனார். இந்த விழாவில் இவர் பங்கேற்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
இப்போது அதைவிட பெரிய அதிர்ஷ்டம் பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவியுடன் சேர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்க இருக்கிறார்.
இதில் கலந்து கொள்ளும்படி பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுவிக்கப் பட்டுள்ளது. இதில் பிராட்லி கூப்பர், லூசிலியூ, ஜேன்போன்டா, கிளாடிஸ்ரைட் உள்பட முக்கிய ஹாலிவுட் நடிகர்–நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிடுகிறார்.
இவர்களுடன் அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் இந்த விருந்தில் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா உலக வி.ஐ.பி.க்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார்.

0 comments:
Post a Comment