தெமட்டகொடை – காலிபுல்லை பிரதேசத்தில் உள்நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டுகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரிலேயே இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தெமட்டகொடை, மாலிகாவத்தை பிரதேசங்களை சேர்ந்த 21 வயது மற்றும் 32 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment