வவுனியா பறநட்டகல் பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த வில்வராசா விஜயசீலன் வயது 28 என்பவர் நேற்று இரவு 24/04/2016 மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளர்
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
பனிக்கர் புளியங்குளத்திற்குஅருகாமையில்யுள்ள வெள்ளையன் குளத்திற்கு இரவு மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் சென்றிருந்ததாகவும் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்கச்சென்ற வேளை சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவருகிறது
சட்டவிரோதமாக மின்சாரம் வைத்தது தொடர்பாக ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிசார் நடாத்தி வருகின்றனர்
0 comments:
Post a Comment