இலங்கைமின்சாரசபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படாது என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். அத்துடன், மின் கட்டணத்தை நல்லாட்சி அரசுக்கு கடவுளின் கருணை இருப்பதால் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், மின் விநியோகத்துக்கான சிக்கல் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 30/03 முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதியும், விசேட நிபுணர்கள் குழுவொன்றை பிரதமரும் அமைத்தனர். இவ்விரு குழுக்களும் தமது அறிக்கைகளை தற்போது சமர்ப்பித்துள்ளன. இவற்றில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.
அவசர தேவைகளின் நிமித்தம் தனியார் துறையினரிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படும். ( 55 மெகாவாட்) விலைமனுக் கோரல் நடைமுறையின் பிரகாரம் குறைந்த விலைக்கே இந்த மின்சாரம் கொள்வனவு செய்யப்படும். கடந்தகாலங்களில்போன்று மோசடி இடம்பெறாது. ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பிறகு மின்சாரத்தை வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது. என்றார்.
அதேவேளை, 'சம்பூர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. நிலக்கரி பயன்படுத்தப்படும் மின் உற்பத்தி நிலையம் என்பதால் இது தொடர்பில் மக்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றனர். இது உணர்வுபூர்வமான விடயமாகும். இது தொடர்பில் நன்கு ஆராய்ந்தே செயற்பட வேண்டும். அந்த வகையில் சகல விடயங்களையும் ஆராய்ந்து இந்த விடயத்தில் அரசு தீர்மானமொன்றை எடுக்கும்'' என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment