அரசாங்க அதிபர் எனது கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்!எஸ்.நிலாந்தன்

ytiftuiமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எனக்கு எதிராக பொலீசில் முறைப்பாடு செய்தமையானது எனது கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான எஸ்.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.இன்று மாலை மட்டக்களப்பு பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில்
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களினால் மட்டக்களப்பு நகர பொலீசில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து நான் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்திற்கு சென்றேன். என் மீது சுமார் ஒன்றரை மணித்தியாளங்கள் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அங்கு என்னை பொலீசார் அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடுமாறும் அவரிடம் மன்னிப்பு கோருமாறு பலதடவைகள் வற்புறுத்தினர் அதற்கு நான் மறுப்புத்தொரிவித்து விட்டேன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சொன்னார்கள்நான் வழக்கு தொடருங்கள் என்மீது எந்தத்தவரும் இல்லை என்றும் நான் குறித்த கட்டுரையை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளேன் என்றும் அதனால் அரசாங்க அதிபருக்கு அவமானமாகவோ அல்லது பிழைகள் இருப்பின் அது குறித்த மறுப்பு அறிக்கையை குறித்த கட்டுரை வெளியான ஊடக நிறுவனத்திற்கு அனுப்புங்கள் அதனை அந்த ஊடக நிறுவனம் பிரசுரிக்க தவறினால் அந்த நிறுவனத்திற்கு எதிராக பத்திரிகை முறைப்பாட்டு ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்திருக்கலாம் என்றும் அதைவிடுத்து என்னை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு கூறியது எந்தவகையில் நியாயமானது அரசாங்க அதிபரின் இந்த செயற்பாடானது எனது கருத்துச்சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நான் கருதுகின்றேன்அதன் ஊடாக நானும் எனது குடும்பமும் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.எனவே இனி வரும் காலங்களில் எனது பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை காரணம் மாவட்ட அரசாங்க அதிபர் என்றவகையில் மாவட்டத்தில் உள்ள பொலீசார் உட்பட அனைவரும் அவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றார்கள் நடைபெற்ற விசாரணையில் கூட பொலீசார் சட்டங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை மாறாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக நீங்கள் எழுதமுடியாது என்பதையே வலியுறுத்தியிருந்தனர் எனவே என்னை அவர்கள் எந்தவகையிலும் பழிவாங்க கூடும் எனவே எனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com