சாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தினால், வடக்கில் இருந்து படைகளைக் குறைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து நாளிதழுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆனால், படைக்குறைப்பு என்பது சரியான வார்த்தை அல்ல. நாம் இதனை, படைகளைச் சரியான அளவில், சரியாக நிலைப்படுத்துதல் என்றே கூறுகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள், அதிர்ச்சியை அளிக்கவில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு, “இல்லை, இது தேசிய பாதுகாப்பு முறையில் திறனைக் காட்டுகிறது என்றும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி பதிலளித்துள்ளார்.
0 comments:
Post a Comment