காதலில் எல்லை மீறல்கள் விண்ணைத்தாண்டி சென்றுக் கொண்டிருக்கின்றன. சமூக தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் அறிமுகத்திற்கு பின் தான் இந்த எல்லை மீறல்கள் அதிகரித்திருக்கின்றன. உண்மையில், வெளியே தெரிய ஆரம்பமாகியிருக்கின்றன.
காதலை தாண்டிய இச்சை பசி தான் இதற்கு முதல் காரணமாக திகழ்கிறது. இதற்கு திரைப்படங்களையோ, இன்டர்நெட்டையோ, ஃபேஷனையோ குற்றம் கூறுவது முற்றிலும் தவறு. காதலில் இவ்வாறன அத்துமீறல்கள் ஏற்படுவதற்கு 100% காரணம் பெற்றோர்கள் தான்.
கல்லூரி பயிலும் பருவ பெண்கள் மத்தியில் தான் அதிகமான காதல் கோளாறுகளும், அத்துமீறல்களும் ஏற்படுகின்றன. எதன் காரணத்தினால் பெண்களிடையே இவ்வாறன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை குறித்து இனி பார்க்கலாம்…
.
கூச்சமின்மை
2005’ல் ஐந்து வயது பெண் குழந்தைக்கு தொப்புள் தெரியும்படி உடை அணிவித்து கூச்சம் அறுத்தெறிய பழக்கியப் பின், இன்று 2015’ல் அந்த பெண் வேறெப்படி இருப்பாள்…? இதற்கு 100% காரணம் பெற்றோர் தான்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம்
மனதளவிலும், உடலளவிலும் என்ன தவறு நடந்தாலும், அதை “ஜஸ்ட் லைக் தட்” என்று என்று எடுத்துக் கொள்ளும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம், காதலில் பல தவறுகள் எழக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இதை சிறு வயதிலேயே அவர்களுள் விதைத்தது என்னவோ பெற்றோர் தான்.
பிரேக்-அப் கலாச்சாரம்
காதலில் இணைவதில் காட்டும் அதே வேகம் பிரிதலிலும் காட்டுகின்றனர் இன்றைய இளைஞர்கள். பிரேக்- அப் செய்வது என்பது மிகப் பெரிய ஃபேஷனாகவும், கெத்தான விஷயமாகவும் உருமாறி இருப்பது, காதலில் ஏற்படும் தவறுகள் அதிகரிக்க காரணமாக இருக்கின்றது.
நண்பர்கள்
உசுப்பேற்றுதல், நண்பர்களுக்கு கை வந்த கலை. ஆண்களுக்கு சேர்த்து வைப்பதில், பெண்களுக்கு பிரித்து வைப்பதில். சின்னதை பெரிதாக்கும் கலை கற்று தேர்ந்தவர்கள் இவர்கள். இதன் காரணமாக தான், பல பிரேக்-அப்களும், அதன் அதன் பிறகு அடுத்தடுத்த காதல்களும் மலர்கின்றன.
நெருங்கி பழகுதல்
என்னதான் ஆணும், பெண்ணும் நண்பர்களாக மட்டும் நெருங்கி பழகினாலும், சில சூழ்நிலை மற்றும் மனநிலை எல்லை தாண்ட வைத்துவிடுகிறது.
நிறைய ஆசை…
நிறைய பேர் தன்னிடம் காதல் கொள்ள வேண்டும் என்ற ஆசை, தற்போதுள்ள பெண்களிடமும், ஆண்களிடமும் அதிகரித்து வருகிறது. ஒரு சில நாட்களில் பழகி, ஒரு சில வாரங்களில் நெருங்கி, ஓரிரு மாதங்களில் பிரிந்தும்விடுகின்றனர். இதன் மத்தியில் அனைத்தும் முடிந்துவிடுகிறது.
பெற்றோர்
நமது தொழில்நுட்ப வளர்ச்சி 50:50 நன்மையும், தீமையும் கலந்துள்ளது. பிள்ளைகள் தீமையை தேர்வு செய்த பின்னரும் கூட, பெற்றெடுத்த உள்ளங்கள் நன்மையை புகட்ட முற்படுவதில்லை. பெற்றோரின் இந்த அக்கறையின்மை தான் காதலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மிக முக்கியமான காரணமாகும்.
0 comments:
Post a Comment